தலைப் பொடுகு

தலையில் உள்ள செல்கள் இறந்து உதிர்தல்

தலைப்பொடுகு (dandruff) என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்கள் உதிர்தல் ஆகும்.[1] சருமத்தின் செல்கள் இறக்கும்போது அவை உதிர்வது சாதாரணமான நிகழ்வுதான். தலையினை சுத்தம் செய்த பிறகு சுமார் ஒரு சதுர சென்டி மீட்டரில் 4,87,000 செல்கள் உதிர்க்கப்படும்.[2] ஆனால் சில மக்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் இந்த உதிர்தல் ஏற்படும். இது காலம் காலமாக தொடர்வதாக இருக்கலாம் அல்லது சில தூண்டுதல் காரணிகளால் ஏற்படக்கூடும். இதன் விளைவாக சுமார் ஒரு சதுர சென்டி மீட்டரில் 8,00,000 செல்கள் உதிர்க்கப்படலாம். இதன் காரணமாக சிவத்தல் மற்றும் எரிச்சல் சேர்ந்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது அதிகமாக நெற்றி, மூக்கு மடிப்பு, காது பின்புறம் மற்றும் தலையில் அதிகமாக தலையில் வெள்ளைச் செதில்களாக (Seborrheic dermatitis) ஏற்படும்.

தலைப்பொடுகு
Dandruff
நுண்நோக்கியூடாக மனிதப் பொடுகு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புதோல் மருத்துவம்
ஐ.சி.டி.-9690.18
நோய்களின் தரவுத்தளம்11911
ம.பா.தD063807

இந்த இன மக்கள், இந்தப் பகுதியினைச் சேர்ந்த மக்கள் என்றில்லாமல் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களை இந்த பொடுகு பாதிக்கிறது. பொதுவாகவே, பூப்படைந்த வயதிற்கு பின் உள்ள வாழ்வுக் காலங்களில் ஆண், பெண் பாரபட்சமின்றி இந்த பொடுகு பாதிப்பு ஏற்படுகிறது. ஏறக்குறைய மக்கள் தொகையில் பாதியளவிற்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது பொதுவாக அரிப்பினை ஏற்படுத்தக் கூடியது. முதிர்ந்த சிவப்பணுக்கள் இந்த பொடுகுத் தோற்றத்தில் முக்கியப் பங்குவகிக்கின்றன. பொடுகுத் தொந்தரவின் அளவுகள் சராசரியாக இருப்பினும் காலங்களைப் பொறுத்து இதன் பாதிப்பு சற்று மாறுபடுகிறது. முக்கியமாக குளிர்காலங்களில் அதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.[2] பொடுகுத் தொந்தரவின் பல பாதிப்புகளை சில ஷாம்பு வகைகளைக் (முடியினை சுத்தம் செய்யும் பொருள்) கொண்டு தீர்க்க முடிந்தாலும், இதற்கு உண்மையான சிகிச்சை இல்லை.[3]

பொடுகுப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உளவியல் மற்றும் உடலியியல் ஆகிய இரு வழிகளிலும் தங்களை பரிசோதிக்க வேண்டும்.[4]

அறிகுறிகள்

தொகு

தலையில் அரித்தல் மற்றும் சில தொந்தரவுகள் ஏற்படுவதே பொடுகுத் தொல்லையின் அறிகுறிகளாகும்.[5] சிவப்பு மற்றும் சற்று அரிப்பு ஏற்படுவது போன்ற சருமத்தின் உணர்ச்சிகள் போன்றவையும் இதன் அறிகுறிகள் ஆகும்.[6]

சில தூண்டு காரணிகள்

தொகு

பொடுகினை ஏற்படுத்தும் சில தூண்டு காரணிகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.[7]

  • அழுத்தம் – அதிகப்படியான மன அழுத்தம் தரும் வேலைகள் மற்றும் செயல்கள், அதிர்ச்சி தரும் செயல்கள், விஷயங்கள்
  • ஒரு பொதுவான தோல் நிலை – ஊறல் தரும் தோல் ஒவ்வாமை, இதனால் எண்ணெய் பிசுபிசுப்பு கொண்ட சருமம் ஏற்படும்.
  • தேவையற்ற பொருட்கள் – முடியினை தேவையற்ற பல பொருட்கள் கொண்டு சுத்தப்படுத்துவது. அதிகப்படியான மற்றும் அளவுக்கதிகமான பயன்பாட்டு பொருட்களால் பொடுகு ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • போதிய சுகாதாரம் இல்லாதது – போதுமான அளவிற்கு ஷாம்பூ பயன்படுத்தாது முடியினை சரியாக பராமரிக்கவில்லையெனில், தலையில் உள்ள சருமம் உதிர்ந்து விழத்தொடங்கும். இதன் காரணமாக சருமத்தின் எல்லையில் உள்ள செல்கள் இறக்கும் பின்னர் அதன் விளைவாக பொடுகு பிரச்சினை ஏற்படும்.
  • குளிர் மற்றும் உலர்ந்த குளிர்காலச் சூழ்நிலைகள்
  • பூசண பீடிப்பு (Povale)
  • சொரியாஸிஸ் (சிவப்பு நிறத்துடன் அரிப்பு மற்றும் சில திட்டுகள் ஏற்படுதல்).

தொற்று நோய் அறிவியல்

தொகு

பொடுகுத் தொந்தரவு வயது முதிர்ந்தோரின் பாதியளவு மக்கள் தொகையில் ஏற்படுகிறது.[3]

காரணங்கள்

தொகு

மேற்தோல் அடுக்கு தொடர்ச்சியாக தன்னைத்தானே வெளியேற்றி வருவதால், இறந்த செல்கள் வெளிப்புறமாக புறந்தள்ளப்பட்டு உதிரும். பலருக்கு இந்த உதிர்தல் மிகவும் குறைவாக இருக்கும் இதனை கண்களால் பார்த்து அறிவதே கடினம். ஆனால் சில வேளைகளில் பல காரணங்களால் இதே நிகழ்வு பல மடங்கு வேகத்தில் நடைபெறும். அப்போது அந்த உதிர்தலை காண இயலும். உத்தேசமாக கூறவேண்டுமாயின், பொடுகினால் பாதிக்கப்பட்டவர்களின் சரும செல்கள் விரைவாக முதிர்வடைந்து 2 முதல் 7 நாட்களுக்குள் உதிர்ந்து விழுகின்றன. ஆனால் இதே நிகழ்வு பொடுகுப் பிரச்சினை இல்லாதவர்களுக்கு ஒரு மாத காலத்தில் நடைபெறுகிறது. இதன் முடிவு இறந்த சரும செல்கள் அதிகளவில் உதிர்ந்து சிறிய எண்ணெய் பிசுக்குகளாக வெள்ளை நிறத்தில் தலை, சருமம் மற்றும் துணிகளில் திட்டுக்களாகத் தோன்றும்.

பின்வரும் காரணங்களுக்கும் பொடுகிற்கும் தொடர்புள்ளது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.[8]

1. சருமம் மற்றும் சரும எண்ணெய் சுரப்பி [9]

2. வளர்சிதை மாற்றத்தில் துணை பொருட்களாக உருவாகும் தோல் நுண்ணுயிர்கள் [10][11][12][13][14]

3. ஏற்புத்திறன் மற்றும் ஒவ்வாமை உணர்திறன்

சிகிச்சை

தொகு

இந்த பொடுகானது தலை சீவும் போது முதுகு, பின் கழுத்து, பின் காது போன்றவற்றில் வெள்ளை செதிலாக உதிரும். அரிப்பு அதிகமாக இருக்கும். இதனை விரட்டுவதற்குத் தலையில் நுரைமக் கழுவி (சாம்பு) போட்டுக் குளித்து எவ்வளவுதான் விரட்டினாலும் தீர்ந்தது போல் தோன்றும். ஆனால் திரும்பவும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அதே பகுதியில் மீண்டும் தோன்றும். சாம்புடன் சிறப்புப் பொருட்கள் சேர்க்கப்பட்டு பொடுகினைக் கட்டுப்படுத்துகின்றனர்.

பூசண எதிர்ப்பிகள்

தொகு

பூசண எதிர்ப்பிகள் பல்வேறு வகைகளில் பொடுகினைத் தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவற்றுள் கேடோகோனஸோல், சிங்க் பைரிதியோன் மற்றும் செலினியம் டிசல்ஃபைட் போன்றவை மிக முக்கியமானவை. கேடோகோனஸோல் ஷாம்பூவில் அதிகளவில் பயன்படுகின்றன.

இந்த கேடோகோனஸோலின் செயல்பாடு மற்றும் தாக்கும் திறனில் மற்ற பூசண எதிர்ப்பிகளைக் காட்டிலும் சிறப்பாக அமைந்திருப்பதால் பொடுகுப் பிரச்சினைக்கான சிகிச்சை முறையில் இவை முன்னிலையில் உள்ளன. அத்துடன் இது தோல் ஒவ்வாமையினால் ஏற்படும் ஊறல்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.[2]

சிஃக்ளோபிரோக்ஸ் என்ற பொருளும் பொடுகினைத் தடுக்க பயன்படும் காரணிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகும்.[15]

நிலக்கரி தார்

தொகு

நிலக்கரி தார் சருமத்தின் மேற்புறத்தில் இறந்த செல்களை உதிர்த்துவிட்டு, சரும செல்களின் வளர்ச்சியினை குறைக்கும்.[16]

முட்டை எண்ணெய்

தொகு

பாரம்பரிய இந்திய [17] மற்றும் சீன [18] மருத்துவ முறையில் இது பயன்படுத்தப்படுகிறது. முட்டை எண்ணெய் பயன்படுத்தப்பட்டாலும் அதன் செயல்பாடுகள் குறித்த சான்றுகள் தெளிவாக இல்லை.

சில குறிப்பிட்ட இடங்களில் தேயிலை மர எண்ணெய் பயனபடுத்தப்படுகிறது.[19][20]

மேற்கோள்கள்

தொகு
  1. Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4160-2999-0. {{cite book}}: |access-date= requires |url= (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. 2.0 2.1 2.2 Ranganathan S, Mukhopadhyay T; Mukhopadhyay (2010). "DANDRUFF: THE MOST COMMERCIALLY EXPLOITED SKIN DISEASE". Indian J Dermatol 55 (2): 130–134. doi:10.4103/0019-5154.62734. பப்மெட்:20606879. http://www.e-ijd.org/article.asp?issn=0019-5154;year=2010;volume=55;issue=2;spage=130;epage=134;aulast=Ranganathan. 
  3. 3.0 3.1 Turkington, Carol; Dover, Jeffrey S. (2007). The Encyclopedia of Skin and Skin Disorders, Third Edition. Facts On File, Inc. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-6403-2.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. "A Practical Guide to Scalp Disorders". Journal of Investigative Dermatology Symposium Proceedings. December 2007. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  5. Turner, GA; Hoptroff, M; Harding, CR (Aug 2012). "Stratum corneum dysfunction in dandruff.". International journal of cosmetic science 34 (4): 298–306. doi:10.1111/j.1468-2494.2012.00723.x. பப்மெட்:22515370. 
  6. Medical news Today. http://www.medicalnewstoday.com/articles/152844.php#symptoms_of_dandruff. 
  7. "Dandruff". drbatul.com. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
  8. DeAngelis YM, Gemmer CM, Kaczvinsky J.R, Kenneally DC, Schwartz JR, Dawson TL; Gemmer; Kaczvinsky; Kenneally; Schwartz; Dawson Jr (2005). "Three etiologic facets of dandruff and seborrheic dermatitis: Malassezia fungi, sebaceous lipids, and individual sensitivity". J. Investig. Dermatol. Symp. Proc. 10 (3): 295–7. doi:10.1111/j.1087-0024.2005.10119.x. பப்மெட்:16382685. 
  9. Ro BI, Dawson TL; Dawson (2005). "The role of sebaceous gland activity and scalp microfloral metabolism in the etiology of seborrheic dermatitis and dandruff". J. Investig. Dermatol. Symp. Proc. 10 (3): 194–7. doi:10.1111/j.1087-0024.2005.10104.x. பப்மெட்:16382662. 
  10. Ashbee HR, Evans EG; Evans (2002). "Immunology of Diseases Associated with Malassezia Species". Clin. Microbiol. Rev. 15 (1): 21–57. doi:10.1128/CMR.15.1.21-57.2002. பப்மெட்:11781265. http://cmr.asm.org/cgi/content/full/15/1/21?view=long&pmid=11781265. 
  11. Batra R, Boekhout T, Guého E, Cabañes FJ, Dawson TL, Gupta AK; Boekhout; Guého; Cabañes; Dawson Jr; Gupta (2005). "Malassezia Baillon, emerging clinical yeasts". FEMS Yeast Res. 5 (12): 1101–13. doi:10.1016/j.femsyr.2005.05.006. பப்மெட்:16084129. 
  12. Dawson TL (2006). "Malassezia and seborrheic dermatitis: etiology and treatment". Journal of cosmetic science 57 (2): 181–2. பப்மெட்:16758556. 
  13. Gemmer CM, DeAngelis YM, Theelen B, Boekhout T, Dawson Jr TL; Deangelis; Theelen; Boekhout; Dawson Jr Jr (2002). "Fast, Noninvasive Method for Molecular Detection and Differentiation of Malassezia Yeast Species on Human Skin and Application of the Method to Dandruff Microbiology". J. Clin. Microbiol. 40 (9): 3350–7. doi:10.1128/JCM.40.9.3350-3357.2002. பப்மெட்:12202578. 
  14. Gupta AK, Batra R, Bluhm R, Boekhout T, Dawson TL; Batra; Bluhm; Boekhout; Dawson Jr (2004). "Skin diseases associated with Malassezia species". J. Am. Acad. Dermatol. 51 (5): 785–98. doi:10.1016/j.jaad.2003.12.034. பப்மெட்:15523360. 
  15. Milani, M; Antonio Di Molfetta, S; Gramazio, R; Fiorella, C; Frisario, C; Fuzio, E; Marzocca, V; Zurilli, M et al. (2003). "Efficacy of betamethasone valerate 0.1% thermophobic foam in seborrhoeic dermatitis of the scalp: An open-label, multicentre, prospective trial on 180 patients". Current Medical Research and Opinion 19 (4): 342–5. doi:10.1185/030079903125001875. பப்மெட்:12841928. https://archive.org/details/sim_current-medical-research-and-opinion_2003_19_4/page/342. 
  16. WebMD: Anti-Dandruff (coal tar)
  17. H. Panda (2004). Handbook On Ayurvedic Medicines With Formulae, Processes And Their Uses. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186623633. Archived from the original on 2016-05-16. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
  18. Zhong Ying Zhou, Hui De Jin (1997). Clinical manual of Chinese herbal medicine and acupuncture. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780443051289.[தொடர்பிழந்த இணைப்பு]
  19. "Tea tree oil". Medline Plus, a service of the U.S. National Library of Medicine from the National Institutes of Health. 27 July 2012.
  20. Prensner R (2003). "Does 5% tea tree oil shampoo reduce dandruff?". The Journal of family practice 52 (4): 285–6. பப்மெட்:12681088. http://www.jfponline.com/Pages.asp?AID=1437. பார்த்த நாள்: 2016-01-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைப்_பொடுகு&oldid=3651994" இலிருந்து மீள்விக்கப்பட்டது