தலையாழி ஞான வைரவர் ஆலயம்

தலையாழியைச் சேர்ந்த சனத்தொகை அதிகமாக 3 பிரிவுகளைச்சேர்ந்த ஒரு குடும்பதைச்சேர்ந்தவர்கள். ஒரு பிரிவு இந்தியாவில் உள்ள திருநெல்வேலியிலிருந்து வந்த சிதம்பரம்பிள்ளையின் பிள்ளைகளும் அவர்கள் குடும்பங்களும் இவருக்கு 5 ஆண்பிள்ளைகளும், 3பெண்பிள்ளைகளும், மூத்த மகன் சரவணமுத்து உடையார், சிதம்பரம்பிள்ளையின் முன்னோர் கட்டப்பொம்மன் காலத்தில் மந்திரியாகவிருந்து கிறிஸ்தவ துன்புறுத்தல்களால் இந்தியாவை விட்டு யாழ்ப்பாணம் வந்தவர்கள்.

தலையாழி ஞான வைரவர் ஆலயம்
தலையாழி ஞான வைரவர் ஆலய நுழைவாயில்.
தலையாழி ஞான வைரவர் ஆலயம் is located in இலங்கை
தலையாழி ஞான வைரவர் ஆலயம்
தலையாழி ஞான வைரவர் ஆலயம்
இலங்கையில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°41′23″N 80°00′58″E / 9.689786°N 80.016130°E / 9.689786; 80.016130ஆள்கூறுகள்: 9°41′23″N 80°00′58″E / 9.689786°N 80.016130°E / 9.689786; 80.016130
பெயர்
பெயர்:தலையாழி ஞான வைரவர் ஆலயம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீ சாமுண்டி சமேத ஞானவைரவர்
வரலாறு
அமைத்தவர்:சரவணமுத்து உடையார்
அறநெறி பாடசாலை ஆரம்ப கால தோற்றம்
தலையாழி கிராமம் வண்ணையம்பதியில் கோவில் கொண்டிருக்கும் அன்னை காமாட்சி ஆலயத்திற்கும் கொக்குவிலுக்கும் இடைப்பட்ட ஒரு கிராமமாகும்.

தலையாழி பூர்வீகக் குடிகள்தொகு

இன்னுமொரு பிரிவு செட்டியார் இனத்தைச்சார்ந்த வீரப்பன் செட்டியாரின் சந்ததியினர். இப்பிரிவில் இருந்து வந்தவர்கள் அதிகமாக சிதம்பரம்பிள்ளை குடும்பத்தினுள் மணம் புரிந்து அவர்களுடன் கலந்து விட்டார்கள். இப்பிரிவிலிருந்து வந்த அருணாசலம்சபாபதி தன்னுடைய மைத்துனியாகிய சரவணமுத்து உடையாரின் மகளைத் திருமணம் செய்தார் .

இன்னுமொரு பிரிவு இருமரபும் தூய தனிநாயகமுதலியின் வம்சாவளியினராகிய புங்குடுதீவைச் சேர்ந்தவரும் சரவணமுத்து உடையாரின் மனைவியும் ஆவார். அவர் புங்குடுதீவிலிருந்து மணப்பெண்ணாக பல்லக்கில் வந்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது. இந்தக்குடும்பத்தவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவினர்கள்.“ [1]


தலையாழி ஞான வைரவர் ஆலய பூஜைதொகு

சந்தன காப்பு சத்தபட்ட மூல வைரவர்

இது திருவிழா நடைபெறும் ஆலயமல்ல அலங்காரத்திருவிழா நடைபெறும் ஆலயம் தை மாதம் அலங்கார திருவிழா ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெறும். இதை விட சதுர்த்தி மாத உற்சவம் , சோமவாரம் , கந்தசட்டி ,ஐப்பசி வெள்ளி , நவராத்திரி என வருடத்தில் 91 உற்சவங்கள் நடைபெறுகின்றது. ஒரு நாளைக்கு இரு காலா பூஜைகள் (காலை -மாலை ) நடைபெறுகின்றது.

தலையாழி ஞான வைரவர் ஆலய உட்கட்டமைப்புதொகு

உள்நுழைந்ததும் மூலாதார கணபதியும் பலிபீடமும் அமைந்துள்ளது. மூலவர் வைரவர் பெருமான். அடுத்து சாமுண்டீஸ்வரி அம்பாள் கருவறை. அடுத்த மண்டபத்தில் உற்சவமூர்த்திகள் அமைந்துள்ளன.

அம்பாள்

கோவில் உள்வீதியில் பரிவார தெய்வங்களாக விநாயகர்,நந்த கோபாலர்,லக்சுமி,முருகன் தனி தனி சிறு கோவில்களாக அமைந்துள்ளது.

ஆலய வீதியின் அருகில் உள்ள பெரிய அரசமரத்தடியில் பிள்ளையார் ஸ்தாபிக்கப்பட்டு நித்திய நைமித்திய பூஜைகள் யாவும் இப்பிள்ளையாருக்கும் நடைபெறும். உற்சவங்களின் போது பிரதம குருக்களே அபிஷேக ஆராதனைகளை செய்வார்.

திருவிழாவின் பொழுது எடுக்கப்பட்டவை

இந்த ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை மண்டபத்தோடு கூடிய சிறிய கோபுரம் உண்டு.[2]

தலையாழி ஞான வைரவர் ஆலயவெளிகட்டமைப்புதொகு

கோவிலின் முன்னாள் சனசமூக நிலையமும் கிராம அலுவலகமும் அமைந்துள்ளது. கோவிலின் இடது பக்கமாக வீதியில் அறநெறி பாடசாலை அமைந்துள்ளது. இடது பக்க கோவிலின் பின்பக்கமாக அரச மரத்தடியில் கணபதி கோவில் அமைந்துள்ளது. அதனுடன் இணைந்து விளையாட்டு மைதானமும் அமைந்து காணப்படுகிறது. கோவிலை சூழ ஞான வைரவர் அடியார்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளது. கோவிலின் வலது பக்கமாக சிறு கிணறும் காணப்படுகிறது.

ஆலய வரலாறும் வளர்ச்சியும்தொகு

தலையாழிப்பதியின் நான்கு தலைமுறைக்கு முந்திய மூத்த குடிமக்கள் தங்கள் வழிபாட்டிற்கான ஞான வைரவப் பெருமான் ஆலயத்தை அமைத்தனர்.

தலையாழி கிராமம் வண்ணையம்பதியில் கோவில் கொண்டிருக்கும் அன்னை காமாட்சி ஆலயத்திற்கும் கொக்குவிலுக்கும் இடைப்பட்ட ஒரு கிராமமாகும். வடக்கே ஒரு ஆழமான குளம் இருந்து இக் கிராமத்தின் பெரும்பகுதி மக்களை வெள்ள அபாயத்தில் நின்றும் காப்பாற்றியது.கிராமத்தின் வடக்கே தலைப்பகுதியில் இந்த நீர்ப்பரப்பு இருந்ததனால் தலையாழி என பெயர் பெற்று இருக்கலாம் என கருதபடுகிறது.

தலையாழிக் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த ஞானவைரவ ஆலயம் ஈழத்திலேயே வைரவப்பெருமானுக்கு அன்று எடுக்கப்பட்ட ஆலயங்களில் மிகப்பெரியது. ஆலயம் நிறுவப்பட்ட வருடம் சரியாக குறிப்பிடமுடியாதெனினும் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழம் பெருமை வாய்ந்த ஆலயமென திட்டவட்டமாக கூறலாம்.“ .[3]


ஆலய நிறுவுனர்தொகு

அறநெறி பாடசாலை தற்கால தோற்றம்

ஆலயத்தை நிறுவியவர்கள் தலையாழிக் கிராமத்தில் தனிச்சிறப்போடு வாழ்ந்து கிராமத்தின் நன்மதிப்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான ஒரு குடும்பத்தைச்சேர்ந்த பெருமகனாவார். இக் கிராமத்தில் அந்நாளில் யாழ்.குடாவில் மிகப்பிரபலமடைந்து விளங்கிய சரவணமுத்து உடையார் என்பவரும் அவரது சகோதரர்களும் அவரின் சகோதரிகளின் கணவன்மாருமே இக் குடும்பத்தவராவார்.

யாழ்ப்பாணத்தின் பிரபல சோதிடர் இரகுநாதையாவும் ஞானவைரவர் ஆலயம் நிறுவுவதில் இவர்களுக்கு உதவியாகவிருந்தார் கிராமத்திலுள்ள ஏனைய பெரியோர்களும் இவர்களுக்கு உதவி எம்பெருமானுக்கு இப் பெரிய ஆலயம் எடுக்க காரணமாயினர் எனக் கூறப்படுகிறது. நாவலர்பெருமான் போதித்த ஆலய ஆசாரவிதிகள், ஆகம விதிகள் ஆகியன கிராம மக்களாலும் பூசகர்களாலும் நன்கு கடைபிடிக்கப்பட்டு நித்திய நைமித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. விசேட வேளைகளில் தனங்களப்பைச் சேர்ந்த இராமநாதர் சம்புநாதர் அவர்களாலும் புராணபடனம் மேற்கொள்ளப்பட்டது.

சபாபதிப்பிள்ளை காலம்தொகு

திரு.மு.அருணாசலம்பிள்ளைக்குப் பின்னர் அவரது புதல்வர் திரு.சபாபதிப்பிள்ளை சைவபரிபாலன சபைத்தலைவராக இருந்து சபை வெளியிட Hindu Organ ஆங்கில ஏட்டின் பிரதம ஆசிரியராக விளங்கினார். இத்துடன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியினதும் அதன் கிளைக் கல்லூரியினதும் முகாமையாளராகவும் கடமை புரிந்தார். பல்வேறு சமய, சமூக சங்கங்களின் தலைமைத்துவமும் இவருக்கு கிடைத்தது. சபாபதிப்பிள்ளை அவர்களின் அறிவாற்றலும் ஆளுமைத் திறனும் அன்று இலங்கைச் சட்டசபையின் ஓர் அங்கத்தவராக நியமனம் பெற அவருக்கு வாய்ப்பளித்தது.
பரிவார தெய்வங்கள்

கிராமத்தில் கிடைத்த மதிப்பும தலையாழி வைரவப் பெருமான் ஆலயத்தைப் புத்தொளி பெறச் செய்ய உதவிய மலையாளப் புகையிலை வர்த்தகர் பலரது உதவி இவருக்குக் கிடைத்தது. ஆலயத்திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற்றன. ஆதி வைரவரை (சூலம்) மூலவராக கொண்டிருந்த இவ் ஆலயத்தில் காசியில் இருந்துகொண்டு வந்த வைரவ மூர்த்தியை மூலவராக இவர் பிரதிஷ்டை செய்தார் எனக்கூறப்படுகிறது. ஆலயம் முன்னரிலும் பார்க்க புதுப் பொலிவு பெற்றது.

சிறிய கோபுரம்

இந்தியாவிலிருந்து கோவிலுக்குத் தேவையான பொருட்களையெல்லாம் தருவித்து வெகுசிறப்பாக வேதாகம வித்தகர்களான குருமார்களைக் கொண்டு கும்பாபிஷேகம் செய்வித்தார். வைரவப்பெருமான் ஆலய வரலாற்றில் சபாபதிப்பிள்ளை அவர்களின் நிர்வாக காலம் ஒரு பொற்காலம் எனில் மிகையாகாது. இப்பெரியாரின் மறைவுக்கு பின்னர் ஆலய நிர்வாகத்தை அவரின் மகன் திரு.கனகரத்தினம் ஏற்றுக்கொண்டார். இவர் கோவிலை பரிபாலிக்கும் காலத்தில் சுகவீனமுறவே கோவில் அலுவல்களைச் செவ்வனே கவனிக்க இயலாதவரானார். இதனால் நிர்வாகமும் தளர்வடைய நித்திய நைமித்திய பூசைகளில் குறைகளும் ஏற்பட்டன. கட்டங்களும் நீண்ட காலமாக திருத்தப்படாததால் இடியபடுகளுக்குள்ளாயின. திரு.கனகரத்தினமும் இறந்து போகவே நீண்டதொரு காலப்பகுதி வரை தலையாழி வைரவப்பெருமான் ஆலயப் பல பகுதிகள் சிதைந்த கோலமாகவே காணப்பட்டது.

நிர்வாகம்தொகு

ஆலய பக்க தோற்றம்

தமிழ், சமூக, சமயம் போன்றவற்றில் பற்று மேலோங்கியவர்களாக விளங்கிய சரவணமுத்து உடையார் குடும்பத்தினர் சரவணமுத்து உடையரிடமே ஆலய நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தனர். சில ஆண்டுகளுக்குப்பின் உடையாரின் மைத்துனர் திரு.மு.அருணாசலம்பிள்ளை ஆலய நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.இவரும் மைத்துனர் உடையாரை அடியொற்றி பத்து நாட்கள் அலங்கார உற்சவம் புராணபடனம் ஆகியவற்றை சிறப்பாக நடாத்தி வந்தார். இப்பெரியார் ஆலயத்தின் பணிகள் தடையின்றிச் செவ்வனே நடைபெறும் பொருட்டு தோட்டகாணிகள் விளைநிலங்கள் ஆகியவற்றை ஆலயத்திற்கு எழுதி வைத்ததோடு ஆலய வடக்கு வீதியில் தங்கள் வளவில் ஒரு மடத்தையும் கட்டி ஆலயக் கிரியைகள் செய்வோர் வசதிக்காகவும் அன்னதானம் ஆகியன நடைபெறவும் உதவினார்.

பஞ்சாங்க உதயம்தொகு

மூலாதார கணபதியும் பலிபீடமும்

ஆலயம் அமைப்பதற்கு ஒத்தாசையாக இருந்தவரும் அர்சகரும், பிரபல சோதிடராகவும் விளங்கிய இரகுநாதையா அவர்கள் வாக்கிய பஞ்சாங்கம் ஒன்றை வெளியிட விருப்பம் தெரிவித்தார். இப்பணிக்கு திரு.மு.அருணாசலம்பிள்ளை அவர்கள் உதவிபுரிந்தார். இதன் மூலம் சோதிட பரிபாலன மடத்திற்கும் ஆலயத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி மடத்தின் தொடர்புள்ளவர்களே தொடர்ந்து ஆலய பூசகர்களாக இருக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. கோவில் முகாமையாளரே மடத்தின் பரிபாலனத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பும் உரிமையும் உடையவராகவும் இருந்தார்.

தலையாழி ஞானவைரவர் ஆலயத்திற்கு நாவலரும், யோகர்சுவாமிகளின் வருகைதொகு

ஈழத் திருநாட்டில் சைவத்தையும், தமிழையும் காக்கவென 1822ஆம் ஆண்டு நல்லை நகரில் அவதரித்த நாவலர் பெருமான் இவ்வாலயத்திற்கு பல்லக்கில் வருகை தந்து சமயப் பிரசங்கங்களை ஆற்றியுள்ளார்.  நாவலர் பெருமானின் சமயாசாரக்கருத்துக்களை ஏற்ற கிராமத்துப் பெரியோர்கள் ஆசாரசீலர்களாக ஆகம விதி பிசகாது ஆலய நித்திய, நைமித்திய கருமங்களை நடாத்தி வந்தனர். பிற்காலத்தில் கொழும்புத்துறை முனிவர் சிவயோகசுவாமிகளும் அவரது அடியார்களும் பலர் இந்த இக் கிராமத்து ஆலயமான ஞானவைரவப் பெருமானை வந்து தரிசித்துள்ளார்.

1990ஆம் ஆண்டுக்கு பின் தலையாழி ஞானவைரவர் ஆலயத்தின் புதுப்பொலிவுதொகு

1988ஆம் ஆண்டு புதர்களால்மூடி இடிபாடுகள் பலவோடு இருந்த எம்பெருமானின் ஆலயத்தைப் புனரமைதனர். அன்றைய ஆலயகுரு கோபாலையா அவர்கள் ஒருசில பெரியாரின் சிறு உதவி பெற்று சிறு திருத்த வேலைகள் செய்யதார். அதற்கு அமரர் பரமசாமியும் முன்னின்று உழைத்தார்.

கும்பாபிஷேகத்தின் சங்காபிஷேகத்தை (1008) செய்யும் கொக்குவில் துரையின் மகனார் திரு. பாலசுப்பிரமணியமும் இவர்களை ஊக்குவித்தார். ஆனால் சிறு தொகை பொருளோடு ஓரிருவர் செய்து முடிக்கத்தக்க திருப்பணியாக இல்லாது பாரிய திருப்பணியாக இருந்தது. திரு.பாலசுப்பிரமணியம் வைரவப்பெருமானின் அருள் பெற்று உயர்ந்த பெரியார் அவர் ஆலயத்தை முழுவதும் புனரமைக்க வேண்டுமென பராமசாமியிடமும் கோபாலையாவிடமும் கூறிக்கொண்டார். பராமசாமியின் இப் பாரிய முயற்சிக்குப் பெரும் பங்களிப்பு அளித்தார். நாகலிங்கம் மாஸ்ரர் என்றால் அறியாதவர் இருக்கமுடியாது. பராமசாமியும் அவரும் இணைந்து ஊர்ப் பெரியவர்களை வழிபடுநர்களைச் சந்தித்தனர். ஊர் மக்கள் ஒன்று திரண்டு வைரவம் பெருமானின் ஆலயத்தைப் புனரமைக்க முன் வந்தனர். வழிபாடுநர் சபை, பரிபாலன சபை உதயம் பெற்றன. இச் சபை ஊடகஇருவரது அயரா உழைப்பினால் புதுமெருகும், புதுப்பொலிவு பெற்றது. புதிதாக நந்தகோபாலரும், முருகனும் பரிவார மூர்த்திகளாக அமைக்கப்பட்டனர். பழுதடைந்திருந்த ஏனைய பகுதிகள் யாவும் திருத்தியமைக்கப்பட்டன. 1990ஆம் ஆண்டு ஆனி மாதம் 4ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்றது. வருடாந்த உற்சவத்தோடு 91 திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

ஆலயம் பற்றிய நூல்கள்தொகு

  • திருமதி கு.ஷண்முகடாஸ் (B.A.Dip-in-Ed) இன் அறநெறி 1


குறிப்புதொகு

  1. "தலையாழி". அறநெறி 6வது ஆண்டு நினைவு சிறப்புமலர் (தலையாழி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அறநெறிப் பாடசாலை. கொக்குவில்.): pp. 11வது. 
  2. http://www.sabapathy.co.uk/temple.html%7CThe Thalaiyali Vairavar Temple
  3. "அறநெறி 1" (in tamil). திருமதி கு.ஷண்முகடாஸ் (B.A.Dip-in-Ed). 2002. pp. 11-22.