தல்வார் கலைக்கூடம்

தல்வார் கலைக்கூடம் (Talwar Gallery), ஒரு சமகால இந்திய கலைக்கூடம் ஆகும். தீபக் தல்வார் அவர்களால் நிறுவப்பட்ட இந்த கலைக்கூடம் செப்டம்பர் 2001 ஆம் ஆண்டில் நியூயார்க்கிலும் 2007 ஆம் ஆண்டில் புதுதில்லியிலும் திறந்து வைக்கப்பட்டது. [1]

கண்ணோட்டம்

தொகு

நியூயார்க்கின் தல்வார் கலைக்கூடம் செப்டம்பர் 2001 இல் தொடங்கப்பட்டது. புது தில்லியின் தல்வார் கலைக்கூடம் 2007 இல் தொடங்கப்ட்டது. தல்வார் கலைக்கூடத்தின் நிறுவனர் தீபக் தல்வார் 1996 ஆம் ஆண்டு முதல் இந்தியாவைச் சேர்ந்த சமகால கலைஞர்களுடன் பணியாற்றி வருகிறார். இன்று இந்திய துணைக் கண்டத்தில் பணிபுரியும் மிகவும் சிறப்பு பெற்ற சில கலைஞர்களையும், 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமானய கலைஞர்களான எஸ்டேட் ஆஃப் ரம்மனா உசேன் மற்றும் நஸ்ரீன் மொஹமதி போன்றோரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள தல்வார் கலைக்கூடமானது இந்திய துணைக் கண்டம் மற்றும் அதன் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களை மையமாகக் கொண்ட ஒரு சமகால கலைக்கூடமாக இயங்கி வருகிறது. கலைஞர் புவியியல் ரீதியாக அமைந்திருக்கிறார், கலை அல்ல என்பதே இந்த கலைக்கூடத்தின் இலக்காக அமைந்துள்ளது. அவர்களின் தேடலும் அவற்றின் பணியும் புவியியல், சமயம், பண்பாடு அல்லது இனம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு எளிமைப்படுத்தப்பட்ட வகைப்படுத்தலையும் கடந்து செயல்பட்டு வருகின்றன.

நியூயார்க் தல்வார்

தொகு

செப்டம்பர் 2001 ஆம் நாளன்று திறக்கப்பட்ட முதல் நியூயார்க்கில் அமைந்துள்ள தல்வார் காட்சிக்கூடத்தில், அருங்காட்சியக காட்சிப்பொருள்கள் மற்றும் சேகரிப்புகளில் இருந்த, கலைஞர்களின் சொந்த தனிப்பட்ட பாணியில் அமைந்த கண்காட்சிகளை நடத்தி வந்துள்ளது. அமெரிக்காவில் இவ்வாறான தனிநபர் கலைப் பொருள்களைக் கொண்ட கண்கட்சியானது தல்வார் நியூயார்க் தல்வார் கலைக்கூடத்தில் 2003 ஆம் ஆண்டில்நஸ்ரீன் மொஹமதி (1937-90) அவர்களால் நடத்தப்பட்டதாகும். இதுவே முதல் தனியார் கண்காட்சி ஆகும். இது இந்தியாவுக்கு வெளியே நடத்தப்பட்ட மொஹமதியின் முதல் தனிக் கண்காட்சி ஆகும். இந்த அவருடைய கண்காட்சியில் அவரது புகைப்படங்களும் முதல் முறையாக இடம் பெற்றிருந்தன. மேலும் தல்வார் 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தனிக் கண்காட்சிகளை மொஹமதியை மையமாகக் கொண்டே நடத்தியது. அவருடைய கலைப்பொருள்கள் மட்டுமே அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (எம்.இ.டி) மொஹமதியின் படைப்புகளை 2016 ஆம் ஆண்டில் தி மெட் ப்ரூயரில் அந்த அருங்காட்சியகாத்தின் முதல் தனிக் கண்காட்சியாக நடத்தியது. அதுபோலவே தல்வார் காட்சிக்கூடம் 2004 ஆம் ஆண்டில் ரஞ்சனி ஷெட்டரின் முதல் தனி கண்காட்சியை அமெரிக்காவில் நடத்தியது. அது முதற்கொண்டு ஷெட்டரின் படைப்புகளை மட்டுமே கொண்டு அமைந்த அவருடைய பெயரில் அமைந்த தனிக் கண்காட்சிகளை ஐ.சி.ஏ. பாஸ்டன் (2008), மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட், நியூயார்க் (2018), [2] தி பிலிப்ஸ் சேகரிப்புகள், வாஷிங்டன் டி.சி (2019) ஆகிய இடங்களில் நடத்தியது. [3] மேற்கத்திய பார்வையாளர்களுக்கு தல்வார் அறிமுகப்படுத்திய மற்ற கலைஞர்களில், ரம்மனா உசேன், ஆல்வார் பாலசுப்பிரமணியம், ஆலன் டிசோசா, ரம்மனா உசேன், ஆலியா சையத், அஞ்சும் சிங், அர்பிதா சிங், முஹன்னட் கேடர், என்.என். ரிம்ஸன் மற்றும் ஷீலா மகிஜானி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

கண்காட்சிகள்

தொகு

2007 ஆம் ஆண்டு முதல் நியூயார்க் தல்வாரில் கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. [4]

வெளியீடுகள்

தொகு

2019: அர்பிதா சிங், நேரத்தைகட்டிக்கொள்வது , எல்லா தத்தா மற்றும் தீபக் தல்வார் எழுதிய எழுதிய உரை

2017: ரஞ்சனி ஷெட்டார், வானத்துக்கும் பூமிக்கும் இடையில், கேத்தரின் டிஜெகர், ரஞ்சனி ஷெட்டார், தீபக் தல்வார் எழுதிய உரை, தல்வார் கலைக்கூடம்

2009: நஸ்ரீன் மொஹமதி, கட்டம் பிரிக்கப்படாதது, , கீதா கபூர், தீபக் தல்வார், ஆண்டர்ஸ் க்ரூகர், ஜான் யாவ் எழுதிய உரை, தல்வார் கலைக்கூடம்

2009: ஆழ்வார் பாலசுப்பிரமணியம், (இல்) இடையில், தீபக் தல்வார் எழுதிய உரை, தல்வார் கலைக்கூடம்

2008: ஆலன் டிசோசா, ஃபுகைப்படப்பணிகளின் ஒரு தசாப்தம், ஆலன் டிசோசா, ஈவ் ஓஷி, மோய் சியென், லூயிஸ் ஃபிரான்சியா, ஸ்டீவன் நெல்சன் எழுதிய உரை, தல்வார் கலைக்கூடம்

2005: நஸ்ரீன் மொஹமதி, கோடுகள் மத்தியில் கோடுகள், வரைதல் ஆவணங்கள் 52, கீதா கபூர், சூசெட் மின் எழுதிய உரை, வரைதல் மையம்

2005: (தேசி) மறு, தல்வார் கலைக்கூடம், 2005 [5]

குறிப்புகள்

தொகு
  1. "About « Talwar Gallery". Talwargallery.com. பார்க்கப்பட்ட நாள் 2016-02-11.
  2. "Ranjani Shettar: Seven ponds and a few raindrops".
  3. "Intersections: Ranjani Shettar". 2019-05-16. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
  4. "Past Exhibitions". பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
  5. "publications « TALWAR GALLERY" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தல்வார்_கலைக்கூடம்&oldid=3215710" இலிருந்து மீள்விக்கப்பட்டது