தளவானூர் குடைவரைக் கோயில்
தளவானூர் குடைவரைக் கோயில் (Thalavanur cave temple) அல்லது சத்ருமல்லேசுவரர் கோவில் (Satrumalleswarar Temple)[1] தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி – மண்டகப்பட்டு எனும் ஊர்களுக்கு இடையே அமைந்த தளவானூரில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுதளவானூரில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோவில் ஆகும். இக்கோவில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டது.[2] தெற்கு முகமாக 32 அடி நீளத்தில் தரைமட்டத்திலிருந்து 3.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[3]
கட்டிடக்கலை
தொகுதளவானூருக்கு வடக்கே பஞ்ச பாண்டவர் மலையில் சத்ருமல்லேசுவரர் கோவில் உள்ளது இக்கோவிலின் முகப்பில் இரு துவாரபாலகர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது இவை ஒரே மாதிரி அமைப்பில் காணப்படாமல் கோவிலின் வலதுபுறத்தில் உள்ள துவாரபாலகர் வலதுகையை இடுப்பில் வைத்தவாறும் இடதுகையை மேலே உயர்தியவாறும் உள்ளார்,கோவிலின் இடதுபுறத்தில் உள்ள துவாரபாலகர் வலதுகையை கீழே தடி மீது தொங்கவிட்டவாறும் இடதுகையை இடுப்பில் வைத்தவாறும் உள்ளார். தூண்கள்மீது ஒருவகை தோரணம் செதுக்கப்பட்டுள்ளது.அதன் பெயர் திருவாசி ஆகும். அதன் இரு பக்கங்களில் உள்ள மீன்களின் வாயிலிருந்து கிளம்பி நடுவில் உள்ள ஒரு சிறு மேடையில் கலக்கிறது. அம்மேடை மீது சிறிய இசைவாணர் சிலை உள்ளது.மகர மீன்கள் கழுத்து மீது இசைவாணர் இருக்கின்றனர்,திருவாசியில் இரண்டு வளைவுகள் காணப்படுகிறது அது ...இரட்டை திருவாசி... ஆகும்.
கல்வெட்டு
தொகுகோவிலின் உள்ளறை குகைவாயிலை நோக்காதுஇடதுபுறமாக இருக்கின்றது,குகை தெற்கு முகமாகவும்,கொவிலின் உள்ளறை கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.உள்ளறையின் முன்பு இரு தூண்கள் உள்ளது இடது புறதூநில் கல்வெட்டு உள்ளது அது தமிழ் மற்றும் வடமொழி பாட்டாகும்.
இக்குடைவரைக் கோயிலின் மேல்புறத்தில் சமணர் படுகைகள் உள்ளது. இக்குடைவரைக் கோயில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The writing on the cave". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2016.
- ↑ "Thalavanur Caves". பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2016.
- ↑ Thalavanur Cave Temple
- "Dalavanur – Satrumalla Pallava Cave Temple". Indian History and Architecture. 20 September 2010. Archived from the original on 15 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 10 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)