தளவாய் புரம்
தளவாய்புரம் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து 105 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பொருளாதாரம் ஆடைகள், பருத்தி புடவைகள், லுங்கிகள் ஆகியவற்றின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது. பருத்தி நூற்பு மற்றும் நெசவுஆலைகள் உள்ளன.
Dhalavaipuram | |
---|---|
town | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 11 km2 (4 sq mi) |
ஏற்றம் | 100.58 m (329.99 ft) |
மக்கள்தொகை (2001)[1] | |
• மொத்தம் | 5,371 |
• அடர்த்தி | 490/km2 (1,300/sq mi) |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
காலநிலை
தொகுஇப்பகுதியின் காலநிலை பாதி வறண்ட வெப்பமண்டல வகை ஆகும். வெப்பநிலை 20 ° C முதல் 37 ° C வரை காணப்படுகிறது. இது அதிக சராசரி வெப்பநிலையும் மற்றும் குறைந்த அளவு ஈரப்பதமும் கொண்டுள்ளது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள் இங்கு வெப்பமான மாதங்கள். தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் துவங்கி, ஆகஸ்ட் வரை நீடித்திருக்கும். மழை பெய்யும். அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இப்பகுதிக்கு மழைநீர் கிடைக்கின்றது.
சஞ்சீவி குன்றுகள்
தொகுசஞ்சீவி குன்றுகள் ராஜபாளையத்தில் சத்ரபட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் அமைதியும், அமைதியான சூழலும் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும்.இலங்கை மன்னன் இராவணனுடன் நடந்த போரில் அம்பு பட்டு மயக்க நிலையில் இருந்த லக்ஷ்மணனைக் காப்பாற்றுவதற்காக, குரங்கு கடவுள் ஹனுமான் சஞ்சீவி மலை முழுவதையும் ஸ்ரீலங்காவுக்கு மூலிகைச் செடிகளோடு கொண்டு சென்று பின்னர் அதைத் தூக்கி எறிந்துவிட்டதாக பாரம்பரியம் கூறுகிறது.அவ்வாறு கீழே விழுந்த மலை, இங்குள்ள சஞ்சீவி மலைகளாகும் என்று கூறப்படுகிறது.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.