தளிபேரு ஆறு
தளிபேரு ஆறு (Taliperu River) என்பது இந்தியாவின் சத்தீசுகரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உருவாகும் கோதாவரி ஆற்றின் ஒரு துணை ஆறு ஆகும். இது கோதாவரி ஆற்றின் இடது கரை துணை ஆறாகும். தளிபேரு தெலங்காணா கம்மம் மாவட்டத்தில் செர்லா அருகே அமைந்துள்ள சங்கமத்தின் வழியாக வடிகாலாகச் செல்கிறது.[1]
இந்த பகுதியில் உருவாக்கப்பட்ட விரிவான கால்வாய் அமைப்புகள் மூலம் இந்த நதியில் வரும் நீர் விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஆற்றில் தளிப்பேறு திட்டம் எனப்படும் அணை கட்டப்பட்டுள்ளது. தெலங்காணா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள செர்லா கிராமம் மற்றும் மண்டலம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள நடுத்தர நீர்ப்பாசனத் திட்டம், தளிபேரு நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டம் சுமார் 5.0 டிஎம்சி தண்ணீரைப் பயன்படுத்துகிறது. கம்மம் மாவட்டத்தில் உள்ள சேரலா மற்றும் தும்முகுடேம் மண்டலங்களில் சுமார் 24500 ஏக்கர் ஆயக்கட்டு இதன் மூலம் பாசனவசதியினைப் பெறுகின்றது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://irrigation.telangana.gov.in/img/projectspdf/taliperu.pdf
- ↑ Inc, Algoritmi Vision. "Taliperu River - Summarized by Plex.page". Plex.page. Archived from the original on 2022-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
{{cite web}}
:|last=
has generic name (help)