தஹெரே மாஃபி
தஹெரே மாஃபி (Tahereh Mafi) (1988 நவம்பர் 9) கலிபோர்னியாவின் சாந்தா மோனிக்காவை தளமாகக் கொண்ட ஈரானிய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான புத்தகங்களை எழுதி தேசிய புத்தக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். இவரது புத்தங்களை நியூயார்க் டைம்ஸ் என்ற புத்தக நிறுவனம் விற்பனை அதிகம் விற்பனை செய்கிறது. [1]
தஹெரே மாஃபி | |
---|---|
2018இல் நடந்த புக்கான் என்ற இரசிகர்கள் மாநாட்டில் தஹெரே மாஃபி | |
பிறப்பு | நவம்பர் 9, 1988 கனெடிகட், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | ஈரானிய அமெரிக்கர் |
கல்வி நிலையம் | சோக்கா பல்கலைக்கழகம் |
வகை | இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும்மான புனைகதை எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஷட்டர் மீ |
துணைவர் | ரான்சம் ரிக்ஸ் (தி. 2013) |
பிள்ளைகள் | 1 |
இணையதளம் | |
taherehbooks |
சுயசரிதை
தொகுமாஃபி 1988 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் அன்று ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கனெடிகட்டில் ஒரு சிறிய நகரத்தில் தனது பெற்றோருக்கு இளைய மகளாகப் பிறந்தார். மேலும், இவருக்கு நான்கு மூத்த சகோதரர்கள் இருக்கின்றனர். [2] இவரது பெற்றோர் ஈரானில் இருந்து குடியேறியவர்கள். 12 வயதில் இவரது குடும்பம் வடக்கு கலிபோர்னியாவுக்குச் சென்றது. 14 வயதில் இவர்கள் ஆரஞ்சு கவுண்டிக்கு குடிபெயர்ந்தனர். [3]
மாஃபி கலிபோர்னியாவின் எர்வின் பல்கலைக்கழக உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். பின்னர் இவர் கலிபோர்னியாவின் அலிசோ விஜோவில் உள்ள அமெரிக்காவின் சோகா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர், எட்டு வெவ்வேறு மொழிகளை கையாளும் மாறுபட்ட திறன்களைக் கொண்டிருக்கிறார். எசுப்பானியாவின் பார்செலோனாவில் ஒரு கல்லூரியில் சில காலம் படிக்க சிலகாலம் வெளிநாடு சென்றார். இந்த பயணத்தின் போது எசுப்பானிய மொழியில் முழுமையாக மூழ்கிப் போவதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. [2]
முதல் புத்தகம்
தொகுஷட்டர் மீ எனற தனது முதல் புதினத்தை எழுதுவதற்கு முன்பு, ஒரு புத்தகத்தை எவ்வாறு எழுதுவது என்பதை நன்கு புரிந்துகொள்வதற்காக ஐந்து கையெழுத்துப் பிரதிகளை எழுதியதாக மாஃபி கூறினார். [4]
ஷட்டர் மீ நவம்பர் 15, 2011 அன்று வெளியிடப்பட்டது. அதன் பின்னர், அன்ரிவீல் மீ (பிப்ரவரி 5, 2013 அன்று வெளியிடப்பட்டது) , இக்னைட் மீ (பிப்ரவரி 4, 2014 அன்று வெளியிடப்பட்டது) ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. ஷட்டர் மீ தொடர்களான டெஸ்ட்ராய் மீ மற்றும் பிராக்சர் மீ என்ற இரண்டு மின் புத்தகங்களும் இவரது கணக்கில் உள்ளன. [5] ஷட்டர் மீ படத்திற்கான திரைப்பட உரிமைகள் 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 2016 இல், மாஃபி மேலும், ஒரு புனைகதையை வெளியிட்டார். [6] ஏப்ரல் 2017 இல், ஷட்டர் மீ புத்தகத்தில் இடம்பெற்ற அதே பாத்திரங்களைத் தொடர்ந்து ஷட்டர் மீ யுனிவர்ஸ் என்ற மற்றொரு முத்தொகுப்பை இவர், அறிவித்தார். அதில் முதல் தொகுப்பான ரெஸ்டோர் மீ மார்ச் 6, 2018 அன்று வெளியிடப்பட்டது.
மாஃபியின் அடுத்த புத்தகம், எ வெரி லார்ஜ் எக்ஸ்பான்ஸ் ஆஃப் சீ, அக்டோபர் 16, 2018 அன்று வெளியிடப்பட்டது. இது இளைஞர்களின் இலக்கியத்திற்கான 2018 தேசிய புத்தக விருதுக்கு நீண்டகாலமாக பட்டியலிடப்பட்டது. [7]
சொந்த வாழ்க்கை
தொகுமாஃபி தற்போது கலிபோர்னியாவின் எர்வின் நகரில் வசித்து வருகிறார். அங்கு இவர் தொடர்ந்து எழுதி வருகிறார். [8] இவர் ஒரு முஸ்லிம். 2013 இல் இவர் எழுத்தாளர் ரான்சம் ரிக்ஸ் என்பவரை மணந்தார். [9] மார்ச் 2017 இல், தான் கருவுற்று இருப்பதாக டிவிட்டர் மூலம் அறிவித்தார். இவருக்கு லயலா என்ற மகள் 2017 மே 30 அன்று பிறந்தாள் .
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.goodreads.com/author/show/4637539.Tahereh_Mafi
- ↑ 2.0 2.1 "Tahereh Mafi Bio". Epic Readers: Your World. Your Books. HarperCollins Publishing.
- ↑ "Not Just for Kids: Author Tahereh Mafi discusses 'Shatter Me'". LA Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-11-28. பார்க்கப்பட்ட நாள் 2016-04-20.
- ↑ "Welcome to Tahereh Mafi's dystopia in the 'Shatter Me' series". GMA News Online. பார்க்கப்பட்ட நாள் 2016-04-20.
- ↑ "Tahereh Mafi". Tahereh Mafi: young Adult Author. பார்க்கப்பட்ட நாள் 23 April 2014.
- ↑ "'Shatter Me' author Tahereh Mafi previews next project, 'Furthermore'". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் 2016-04-20.
- ↑ "National Book Awards 2018 – National Book Foundation". www.nationalbook.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-11.
- ↑ "Ransom Riggs and Tahereh Mafi's home for bestselling authors". http://articles.latimes.com/2014/jan/09/entertainment/la-ca-jc-ransom-riggs-tahereh-mafi-20140112.
- ↑ "The Future of Books Is Experimental: At Home with Tahereh Mafi and Ransom Riggs". Mental Floss. பார்க்கப்பட்ட நாள் 2016-04-20.