தாகனு அனல் மின் நிலையம்

தாகனு அனல் மின் நிலையம் (Dahanu Thermal Power Station) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம்[1] பால்கர் மாவட்டத்தில் கடற்கரையோர தாகனு நகரில் தாகனு அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மும்பை-அகமதாபாத் தொடருந்து தடத்தில் மும்பைக்கு வெளியே 120 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பை-அகமதாபாத் – தில்லி தேசிய நெடுஞ்சாலை எண் எட்டுக்கு 20 கிலோமீட்டர் தொலைவிலும் இம்மினுற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. ரிலையன்சு தாகனு அனல் மின் நிலையம் என்ற பெயராலும் அழைக்கப்படும் இம்மின்னுற்பத்தி நிலையத்தில், நிலக்கரி எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தாகனு அனல் மின் நிலையம் பெரும்பாலும் ஆங்கில எழுத்துகளில் சுருக்கமாக டி.டி.பி.எசு என்ற சுருக்கப் பெயராக அடையாளப்படுத்தப்படுகிறது. ரிலையன்சு உள்கட்டமைப்பு நிறுவனம் இம்மின்னுற்பத்தி நிலையத்தை நிர்வகிக்கிறது[2].

தாகனு அனல் மின் நிலையம் (டி.டி.பி.எசு)

தாகனு அனல் மின் நிலையத்தில் மொத்தமாக 500 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய இரண்டு மின்னுற்பத்தி அலகுகள் (2X250 மெகாவாட்) அமைந்துள்ளன. 1995 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இம்மின்னுற்பத்தி நிலையம் 1996 முதல் வர்த்தக முறையில் மின்னுற்பத்தி செய்து வருகிறது.[3]

அலகு எண் கொள்திறன் துவக்கம் நிலை
1 250 மெகாவாட் 1995 சனவரி செயல்படுகிறது
2 250 மெகாவாட் 1995 மார்ச்சு செயல்படுகிறது

மேற்கோள்கள் தொகு

  1. मटा वृत्त सेवा (MaTa Vrutt Seva) (October 2010). "डहाणू औष्णिक ऊर्जा प्रकल्पाला राजीव गांधी पर्यावरण पुरस्कार" (in Marathi). Maharashtra Times (Palghar District, Maharashtra, India). http://maharashtratimes.indiatimes.com/maharashtra/thane-kokan/-/articleshow/6716172.cms?. 
  2. http://articles.economictimes.indiatimes.com/2009-10-09/news/27663881_1_bags-award-greentech-foundation-dahanu-thermal-power-station
  3. "RInfra". பார்க்கப்பட்ட நாள் 20 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகனு_அனல்_மின்_நிலையம்&oldid=3781917" இலிருந்து மீள்விக்கப்பட்டது