தாகுர்லி
இந்தியாவின் மகாராட்டிர மாநில கிராமம்
தாகுர்லி (Thakurli) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் கல்யாண் டோம்பிவ்லி மாநகராட்சி புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு துணைநகரமாகும். டோம்பிவ்லி மற்றும் கல்யாண் நகரங்களுக்கு இடையே தாகுர்லி அமைந்துள்ளது. தாகுர்லி இரயில் நிலையம் இந்நகரத்திற்கு சேவை செய்கிறது. இப்பகுதி ஒரு பிரித்தானிய இரயில்வே காலனியாக இருந்தது, மேலும் இங்கு இரயில்வேயின் பழைய பங்களாக்களைக் காணலாம். ஓர் இரயில்வே நிறுவனம் மற்றும் அருகிலுள்ள இரயில்வே துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் நீராவி அடிப்படையிலான மின் நிலையமான "சோழ பவர் அவுசு" ஆகியவையும் இக்கிராமத்தில் உள்ளன.[1]
தாகுர்லி Thakurli | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 19°13′32″N 73°05′48″E / 19.225507°N 73.096730°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |