தாக்குரான் ஆறு

மேற்கு வங்காள ஆறு

தாக்குரான் ஆறு (Thakuran River) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் பாய்கிறது. சுந்தரவனக் காடுகளிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் பாய்ந்து ஒரு பரந்த முகத்துவாரத்தை உருவாக்குகிறது. இயாமிரா ஆறு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.

தாக்குரான் ஆறு
Thakuran River
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
சிறப்புக்கூறுகள்
வெளியேற்றம் 
 ⁃ அமைவுவங்காள விரிகுடா

செயநகர் மச்சில்பூருக்கு அருகில் தாக்குரான் ஆறு உருவாகிறது. சப்தமுகி ஆற்றுடன் பல இடங்களில் இது இணைகிறது. மதுராபூருக்கும் செயநகருக்கும் இடையில் இது எல்லையை உருவாக்குகிறது.[1]

தாக்குரான் ஆற்றின் அமைப்பு கடல் முகத்திற்கு அருகில் மிகவும் அகலமானதாகும். மேற்குப் பகுதியில் உள்ள தாக்குரான் அமைப்பின் முக்கிய கிளைகளாக கத்ரகாலி கல், டம்டமா கல், மோனி நதி, புக்சரா, ரைதிகி, சிபுவா கேங், பக்ரலி கால் மற்றும் ராசு கிரீக் ஆகியவை ஓடுகின்றன. கிழக்குப் பகுதியில் உள்ள இணைப்புக் கால்வாய் பெரும்பாலும் பைஞ்சாபி கல், குரா கால், கைகால்மாரி-அச்மல்மாரி-சுயா நதி, துலிபசானி காங்கு மற்றும் சுல்காட்டி காங்கு போன்ற கால்வாய் வளைவுகள் ஆகும். இந்த சுழல்கள் தங்களுக்குள் அலை கால்வாய்களின் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.[2]

தாக்குரானைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன. அவை இயற்கையான சதுப்புநில வாழ்விடத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. தாக்குரானுக்குக் கிழக்கே உள்ள பகுதி சுந்தரவனப் புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியின் கீழ் வருகிறது - இது பொதுவாக பறவைகள் பார்வையாளர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகல் அனுமதிக்கப்படாத பகுதியாகும்.[3]

சில பகுதிகளில் தாக்குரானைச் சுற்றியுள்ள பகுதிகள் கரைகளால் பாதுகாக்கப்படுகின்றன. அவை சில சமயங்களில் அலைகளின் வெள்ளத்தால் உடைக்கப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Banerjee, Anuradha (1998). Environment, population, and human settlements of Sundarban Delta By Anuradha Banerjee. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170227397. பார்க்கப்பட்ட நாள் 2009-11-14.
  2. Mandal, Asim Kumar (2003). The Sundarbans of India: a development analysis By Asim Kumar Mandal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173871436. பார்க்கப்பட்ட நாள் 2009-11-14.
  3. "Birds of India: West Bengal Coast, India". Archived from the original on 9 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-11-14.
  4. "Race against raging river". The Telegraph, 26 May 2009. Archived from the original on 30 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-11-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்குரான்_ஆறு&oldid=3882314" இலிருந்து மீள்விக்கப்பட்டது