தாச்சியார்டைட்டு-K
தாச்சியார்டைட்டு-K (Dachiardite-K) என்பது K4(Si20Al4O48)•13H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[3][2] இது ஓர் அரிய சியோலைட்டு குழுவைச் சேர்ந்த கனிமமாகும். தாச்சியார்டைட்டு-Ca மற்றும் -தாச்சியார்டைட்டு-Na கனிமங்களின் பொட்டாசியம் ஒப்புமையாக தாச்சியார்டைட்டு-K கருதப்படுகிறது. எனவேதான் பின்னொட்டாக பொட்டாசியத்தை அடையாளப்படுத்தும் K பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.[4] [1] இத்தாலிய புவியியலாளர் அண்டோனியோ தாச்சியார்டியின் நினைவாக கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது.
தாச்சியார்டைட்டு-K Dachiardite-K | |
---|---|
பொதுவானாவை | |
வகை | டெக்டோசிலிக்கேட்டு, சியோலைட்டு |
வேதி வாய்பாடு | K4(Si20Al4O48)·13H2O |
இனங்காணல் | |
நிறம் | பனி-வெண்மை |
படிக இயல்பு | கோளத் திரட்டுகளில் ஊசி போன்ற படிகங்கள் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு அறியப்படாத இடக்குழு |
பிளப்பு | (100), சரிபிளவு |
முறிவு | குறுக்குப் படி |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 4 |
அடர்த்தி | 2.18 (அளக்கப்பட்டது), 2.17 (கணக்கிடப்பட்டது; தோராயம்) [கி/செ.மீ3] |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα=1.48, nβ=1.48, nγ=1.48 (தோராயம்) |
பலதிசை வண்ணப்படிகமை | இல்லை |
2V கோணம் | 65o (அளக்கப்பட்டது) |
நிறப்பிரிகை | தனித்துவம் |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தாச்சியார்டைட்டு-K கனிமத்தை Dac-K[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தோற்றம்
தொகுபல்கேரியாவின் கிழக்கு ரோடோப்சு மலைத்தொடரில் தாச்சியார்டைட்டு-K கண்டுபிடிக்கப்பட்டது. பேரைட்டு, கால்சைட்டு, கிளினோப்டிலோலைட்டு-Ca, செலதோனைட்டு, செயோலைற்று-Ca, தாச்சியார்டைட்டு-Na, பெர்ரியரைட்டு-K, பெர்ரியரைட்டு-Mg, பெர்ரியரைட்டு-Na, மார்தெனைட்டு மற்றும் சிமெக்டைட்டு ஆகிய கனிமங்களுடன் கலந்து தோன்றுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Dachiardite-K: Dachiardite-K mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
- ↑ 2.0 2.1 2.2 Encheva, S., Petrov, P., Chukanov, N., and Pekov, I., 2015. Dachiardite-K from the area of Austa village, Momchilgrad municipality, Eastern Rhodopes – a new mineral species of zeolite group. Bulgarian Geological Society, National Conference with international participation “GEOSCIENCES 2015”, 10-11 Dec 2015, Sofia, Bulgaria; pp. 17-18
- ↑ Chukanov, N.V., Encheva, S., Petrov, P., Pekov, I.V., Belakovskiy, D.I., Britvin, S.N., and Aksenov, S.M., 2015. Dachiardite-K, IMA 2015-041. CNMNC Newsletter No. 27, October 2015, 1224; Mineralogical Magazine 79, 1229–1236
- ↑ "dachiardite". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 30 May 2024.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.