தாட்டியன் என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் ஐந்தாமானவன். இவன் திரிதரன் (பொ.பி. 460) என்ற இராசராட்டிரப் பாண்டியர்களுள் நாலாமானவனின் ஆட்சிக்குப் பிறகு ஆண்டவன். இவன் ஆட்சியில் தாதுசேனன் என்ற உரோகணம் நாட்டு அரசன் இராசராட்டிரத்திற்கு படையெடுத்து வந்து தோல்வியுற்றான். இவர்கள் இருவருக்கும் பல தடவை போர் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அனைத்திலும் பாண்டியனே வெற்றி பெற்றான். கடைசியாக இவர்கள் இருவருக்கும் நடந்த போரில் தாட்டிய பாண்டியன் இறந்து போனாலும் பாண்டியர் படையே வெற்றி பெற்றது.[1]

இராசராட்டிரப் பாண்டியரின் கீழ் வட இலங்கை (நீல நிறம்) கி.பி. 436 - 463
இராசராட்டிரம்
வம்சம் பாண்டியர்
நாடு இராசராட்டிரம்
எல்லை மகாவலி கங்கை ஆறு (தெற்கெல்லை) மற்ற திசைகளில் கடல்
தலைநகரம் அநுராதபுரம்
இராசராட்டிரப் பாண்டியர்களின் பட்டியல்
பாண்டு (பாண்டியன்) பொ.பி. 436 - 441
பரிந்தன் பொ.பி. 441 - 444
இளம் பரிந்தன் பொ.பி. 444 - 460
திரிதரன் பொ.பி. 460
தாட்டியன் பொ.பி. 460 - 463
பிட்டியன் பொ.பி. 463

கல்வெட்டு

தொகு

உரோகணம் நாட்டிலுள்ள கதிர்காமம் என்ற முருகன் படைவீட்டில் இவனுடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதனால் இவனது ஆட்சியில் இராசராட்டிரம் அரசு இலங்கை முழுதும் பரவியிருந்ததை அறிய முடிகிறது. அக்கல்வெட்டின் படி இவன் புத்த சமயத்தை சேர்ந்தவன் என்றும் கிரிவிகாரை என்னும் புத்தமடத்திற்கு தானம் அளித்தான் என்றும் உரோகணம் நாட்டில் சில காலம் தங்கியிருந்தான் எனவும் தெரிகிறது.[2]

மூல நூல்கள்

தொகு
  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
  • சூல வம்சம்

மேற்கோள்கள்

தொகு
  1. சூல வம்சம், 38ஆம் பரிச்சேதம், 33
  2. Epigraphia Zeylonica, Vol 3, PP 216 - 219
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாட்டியன்&oldid=3602028" இலிருந்து மீள்விக்கப்பட்டது