தாண்டலம் ஐந்தயோடைடு
தாண்டலம் ஐந்தயோடைடு (Tantalum pentaiodide) என்பது Ta2I10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொன்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்துடன் ஈரக்காற்றில் வினைபுரியும் தன்மையுடன் எதிர்காந்தப் பண்பும் கொண்ட ஒரு திண்மமாக காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தாண்டலம்(V) அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
26814-38-0 | |
பண்புகள் | |
Ta2I10 | |
வாய்ப்பாட்டு எடை | 1631 |
தோற்றம் | கருப்புநிறத் திண்மம் |
அடர்த்தி | 5.8 கி/செ.மீ3 |
உருகுநிலை | 543 °C (1,009 °F; 816 K) பதங்கமாகிறது. |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொகுப்புமுறை தயாரிப்பு
தொகுஉலோக தாண்டலத்துடன் அதிகப்படியான அயோடின் சேர்த்து வினைபடச் செய்து தாண்டலம் ஐந்தயோடைடு தயாரிக்கலாம். தாண்டலம் ஐந்தாக்சைடுடன் அலுமினியம் மூவயோடைடு சேர்த்து சூடுபடுத்தியும் இதைத் தயாரிக்கலாம்:[1]
- 3 Ta2O5 + 10 AlI3 → 3 Ta2I10 + 5 Al2O3
அமைப்பு
தொகுஇதனுடைய படிக அமைப்பு எக்சு-கதிர் படிகவியல் ஆய்வால் உறுதி செய்யப்படுகிறது. விளிம்பில் பகிர்ந்து கொண்டுள்ள இரடை எண்முக அமைப்புகளுடன் இப்படிகம் அமைந்துள்ளது. இவ்வமைப்பே தாண்டலம் மற்றும் நையோபியம் தனிமங்களின் பல ஐந்தயோடைடுகளிலும் அறியப்படுகிறது[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ G. Brauer "Hydrogen, Deuterium, Water" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 2. p. 1316.
- ↑ U. Müller "Die Kristallstruktur von Tantalpentajodid und ihre Fehlordnung" Acta Crystallographica, Section B 1979, volume 35, pp. 2502-9. எஆசு:10.1107/S0567740879009778