தாண்டலம் போரைடு
தாண்டலம் போரைடுகள் (Tantalum borides ) என்பவைகள் தாண்டலம் மற்றும் போரான் தனிமங்களின் சேர்மங்களாகும். உச்ச அளவு கடினத்தன்மை பெற்றிருப்பதன் காரணமாக இச்சேர்மங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
TaB படலம் மற்றும் TaB2 படிகம் ஆகியவற்றின் கடினத்தன்மை அளவு ~30 கிகாபா என விக்கர்சு கடினத்தன்மை சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன[1][2][3]. இத்தகையச் சேர்மங்கள் 700 0 செ வெப்பநிலைக்கு கீழான ஆக்சிசனேற்றம் மற்றும் அமிலங்களால் அரிக்கப்படாமல் நிலைப்புத் தன்மை கொண்டிருக்கின்றன[1][3]
பண்புகள்
தொகுபல இருபோரைடுகள் (AlB2, MgB2) போலவே TaB2 சேர்மமும் அறுகோணப் படிக அமைப்பையே கொண்டுள்ளது.[4] . சில போரைடுகளின் இடக்குழுக்கள் இங்கு தரப்படுகின்றன. TaB – நேர்சாய்சதுரப் படிகம், தாலியம்(I) அயோடைடு –வகை Cmcm , Ta5B6 Cmmm வகை, Ta3B4 Immm வகை, அறுகோண அலுமினியம் இருபோரைடு, P6/mmm வகை என்ற இடக்குழுக்களில் இடம்பெற்றுள்ளன[3].
தயாரிப்பு
தொகுமண்டல உருக்குப் படிகமாக்கல் செயல்முறையில் 6 செ.மீ நீளமும் 1 செ.மீ விட்டமும் கொண்டுள்ள ஒற்றைப் படிகங்கள் தயாரிக்கப்படுகின்றன. -TaB, Ta5B6, Ta3B4 or TaB2 [2][3]
540 முதல் 800 0 செ வெப்பநிலை அளவுகளில் TaCl5-BCl3-H2-Ar என்ற வாயுக் கலவையில் இருந்து தாண்டலம் போரைடு படலங்களை படிவுகளாக்க முடியும். 600 0 செ அளவுக்கு அதிகமான வெப்பநிலையில், ஆதார வளிமத்தின் வளிமப் பாய்வு வீதம் (BCl3/TaCl5) ஆறு எனவுள்ள போது ஒற்றைத் தறுவாய் TaB2 சேர்மத்தையும் ஒற்றைத் தறுவாய் TaB BCl3/TaCl5 = 2–4 மற்றும் 600–700 0 செ வெப்பநிலையிலும் உருவாகின்றன[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 S. Motojima et al. "Low-temperature deposition of TaB and TaB2 by chemical vapor deposition" J. Nucl. Mater. 105 (1982) 262
- ↑ 2.0 2.1 S. Otani et al. "Floating zone growth and high-temperature hardness of NbB2 and TaB2 single crystals" J. Cryst. Growth 194 (1998) 430
- ↑ 3.0 3.1 3.2 3.3 S. Okada et al. "Single crystals of TaB, Ta5B6, Ta3B4 and TAB2, as obtained from high-temperature metal solutions, and their properties" J. Cryst. Growth 128 (1993) 1120
- ↑ X. Chen et al. "Electronic and Structural Origin of Ultraincompressibility of 5d Transition-Metal Diborides" Phys. Rev. Lett. 100 (2008) 196403