தாண்டவராய முதலியார்

இந்திய தமிழ் எழுத்தாளர், புலவர்

தாண்டவராயர் சென்னையை அடுத்துள்ள வில்லிப்பாக்கத்தில் பிறந்தவர். தமிழ் ஆர்வம் கொண்ட இவர் நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார்.

கல்வியும் பணிகளும்

தொகு

உழலூர் வேலப்ப தேசிகர், வரதப்ப முதலியார், வடுகநாதத் தம்பிரான் முதலியோரிடத்துத் தமிழ் பயின்றுள்ளார். ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்துஸ்தானி, மராத்தி, சமஸ்கிருதம் முதலான மொழிகளைக் கற்றவர். மகாவித்துவான் இராமநுச கவிராயர், சரவணப் பெருமாளையர் ஆகியோரிடத்துத் தமிழ் இலக்கணங்களைக் கற்று வாதிட்டார். சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்துள்ளார். 1843-இல் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.

இயற்றிய நூல்கள்

தொகு
  • இலக்கண வினா விடை
  • கதாமஞ்சரி
  • திருத்தணிகைமாலை
  • திருப்போரூர்ப் பதிகம்
  • பஞ்சதந்திர கதை (மொழிபெயர்ப்பு)

பதிப்பித்த நூல்கள்

தொகு

வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் மூன்று பகுதிகளை, 1824-ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிட்டார். இலக்கணப் பஞ்சகம் (நன்னூல் மூலம், அகப்பொருள் மூலம், புறப்பொருள் வெண்பாமாலை) நூலை 1835-இல் பதிப்பித்தார். சூடாமணி நிகண்டின் முதல் பத்துப் பகுதிகளை அச்சிட்டார். சேந்தன் திவாகரத்தின் முதல் எட்டுப் பகுதிகளை அச்சிட்டு வெளியிட்டார்.

மறைவு

தொகு

தாண்டவராய முதலியார் 1850 ஆம் ஆண்டு இறந்தார்.

உசாத்துணை

தொகு
  1. மயிலை சீனி. வேங்கடசாமி (2001). பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம். மெய்யப்பன் தமிழாய்வகம்.
  2. இராமசாமிப் புலவர், 'தமிழ்ப் புலவர்கள் வரிசை' தாண்டவராய முதலியார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டவராய_முதலியார்&oldid=3726243" இலிருந்து மீள்விக்கப்பட்டது