தாதா லேக்ராஜ்

இந்தியாவின் ஆன்மீக குரு

தாதா லேக்ராஜ் என்று அழைக்கப்படும் லேக்ராஜ் குப்சந்த் கிர்பலானி (Lekhraj Khubchand Kirpalani), 15 திசம்பர் 1876 - 18 சனவரி 1969) பிரம்மா குமாரிகளை நிறுவிய ஒரு இந்திய ஆன்மீக குரு ஆவார்.[1]

லேக்ராஜ் குப்சந்த் கிர்பலானி (பிரம்மா பாபா)
சுய தரவுகள்
பிறப்பு15 திசம்பர் 1876
ஐதராபாத், சிந்து, பிரிட்டிசு ராஜ்
இறப்பு18 சனவரி 1969(1969-01-18) (அகவை 92)
சமயம்இந்து ஆன்மீகவாதி
பிரம்மா குமாரிகள்
தேசியம்இந்தியர்
வேறு பெயர்(கள்)பிரஜாபிதா பிரம்மா, பிரம்மா பாபா

தொடக்க கால வாழ்க்கை

தொகு

லேக்ராஜ் கூப்சந்த் கிருபலானி 1876 டிசம்பர் 15 ஆம் தேதி ஹைதராபாத் சிந்து மாகாணத்தில், வல்லபாச்சாரியார் கிருபளானி குடும்பத்தில் தாதா லேக்ராஜ் பிறந்தார். இவரது தந்தை ஓர் ஆசிரியராவார்.[2] மேலும் இவர் தரை விரிப்புகளை விற்பனை செய்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். படிப்படியாக வைர வியாபாரத்தில் நுழைந்து, நன்கு அறியப்பட்ட நகைக்கடைக்காரராகவும், இவரது சமூகத்தில் மரியாதைக்குரியவாகவும் விளங்கினார்.[3] தனது ஐம்பதாவது வயதில் மெய்யுணர்வு பெற்ற நிலையில் ஐதராபாத் சென்று ஆன்மிகத்தில் ஈடுபட்டார்.[4]

ஆன்மீக வாழ்க்கை

தொகு

ஓம் மண்டலி

தொகு

1936 இல், லேக்ராஜ் ஓம் மண்டலி என்ற ஆன்மீக அமைப்பை நிறுவினார்.[5][6]

பிரம்ம குமாரிகள்

தொகு

1937-களில் பிரம்ம குமாரிகள் இயக்கம் தாதா லேக்ராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது பிரித்தானிய இந்தியாவில் தொடக்கப்பட்ட ஓர் ஆன்மீக இயக்கமாகும்.[7] பின்னாளில் இவரை பிரம்ம பாபா என அழைத்தனர்

இந்த அமைப்பு இராஜ யோக தியானம், ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் (சீவாத்மா) பற்றி போதிக்கின்றது. இது அனைத்து ஆத்மாக்களும் உயர்வான நிலையையும் நல்ல பண்புகளையும் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்துகின்றது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Zahida Rehman Jatt, Zahida Rehman Jatt (February 28, 2018). "How a small feminist group led by Hindu women in pre-Partition Sindh went on to get global renown". dawn.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-24.
  2. பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், சாந்திதாம், பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் (2012-01-18). ஆதிதேவ் முதல் மனிதர். பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், சாந்திதாம். p. 20.
  3. 'Custodians of Purity, An Ethnography of the Brahma Kumaris', Tamasin Ramsay, PhD (2009), Monash University
  4. Abbott, Elizabeth (2001). A History of Celibacy. James Clarke & Co. pp. 172–174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7188-3006-7.
  5. "maris The Foundation Years". brahmakumarisresearch.org. பார்க்கப்பட்ட நாள் 2024-11-24.
  6. "History of the Brahma Kumaris". brahmakumaris.org. பார்க்கப்பட்ட நாள் 2024-11-24.
  7. Encyclopedia of New Religious Movements. Peter Clarke. Routledge, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-59897-0 (Adobe e-reader format)
  8. Religions of the World. A Comprehensive Encyclopedia of Beliefs and Practices. J Gordon Melton and Martin Baumann. Facts on File Inc, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-5458-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதா_லேக்ராஜ்&oldid=4149591" இலிருந்து மீள்விக்கப்பட்டது