ததீசி முனிவர்

(தாதிசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ததீசி முனிவர் வேத கால மகாரிசிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷி மற்றும் சிட்டி தேவி தம்பதியரின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் சுவர்ச்சா ஆகும். ததீசி - சுவர்ச்சா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் பிப்பலாத மகரிஷி ஆவார்.

ததீசி முனிவர்
இந்திய அஞ்சல் தலையில் ததீசி முனிவர்
வகைமுனிவர்
துணைசுவர்ச்சா [1]
பெற்றோர்கள்அதர்வண மகரிஷி - சிட்டி தேவி
குழந்தைகள்பிப்பலாத மகரிசி
நூல்கள்ரிக் வேதம், புராணங்கள்

வரலாறு

தொகு

விருத்திராசூரனை வதைக்க இந்திரன் ஆயுதம் செய்ய முனைந்த பொழுது, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி இவர் தனது உயிரை துறந்து, தன் முதுகெலும்பை கொடுத்ததாகவும், அதில் செய்த வஜ்ராயுதத்தைக் கொண்டே இந்திரன் போரில் வென்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

இந்திய அரசின் உயர் விருதான பரம் வீர் சக்ராவின் மேல் இவரது முதுகெலும்பின் படமே உள்ளதென்பது சிறப்பான செய்தியாகும்.

புராணம்

தொகு

ததீசி புராணம் - திருமலைநாதர் என்பவரால் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழில் எழுதப்பட்ட நூல். ததீசி முனிவரின் வரலாற்றைக் கூறுவது. வடமொழி சிவபுராணத்தின் பகுதியாகத் ததீசி புராணம் வருகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "UP Auth". Puranic Encyclopedia. p. 774.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ததீசி_முனிவர்&oldid=4126060" இலிருந்து மீள்விக்கப்பட்டது