தாதியோ
தாதியோ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகெலும்பி
|
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை
|
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்ரினிடே
|
பேரினம்: | இலாபுகா
|
இனம்: | இ. தாதிர்சோரி
|
இருசொற் பெயரீடு | |
இலாபுகா தாதிர்சோரி மேனன்1952
|
தாதியோ (Dadio)(இலாபுகா தாதிர்சோரி) ஒரு சைப்ரினிட் மீன் ஆகும். இது பொழுதுபோக்கிற்காக மீன் வளர்ப்பவர்களிடையே அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் இதன் தோற்றத்தில் இது முற்றிலும் டானியோ நிக்ரோபாசியாடசப் போல் இல்லை. இலாபுகா தாதிர்ஜோரி என்பது நீலக் கோடு கொண்ட தங்கம்/வெள்ளி மீன் ஆகும். இது இரண்டு வண்ண உருவங்களைக் கொண்டுள்ளது. ஒன்று தனித்துவமான நீலக் கோட்டுடனும், மற்றொன்று புள்ளியிடப்பட்ட நீலக் கோட்டுடனும் காணப்படும். மீசை (பார்பெல்) இல்லை. பெரும்பாலான தானியோன்களைப் போலவே, இந்த மீன் துள்ளிக் குதிக்கும் தன்மையுடையது. எனவே மீன் காட்சித் தொட்டியில் இடைவெளிகள் இல்லாத இறுக்கமான பொருத்தப்பட்ட மூடியினை இடப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே காணப்படும் இந்த அகணிய உயிரியின், இரண்டு வண்ண உருவங்களும் தமிழ்நாட்டிலிருந்து கோவா வரை காணப்படுகிறது.[2] இதனைப் பெரிய மீன்களுடன் சேர்ந்து காட்சிக்கு வைப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Raghavan, R. & Ali, A. (2013). "Laubuca dadiburjori". IUCN Red List of Threatened Species 2013: e.T172318A6866544. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T172318A6866544.en.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2015). "Laubuka dadiburjori" in FishBase. April 2015 version.