தானா பகத் இயக்கம்
தானா பகத் இயக்கம் (Tana Bhagat Movement) (1914-1920) என்பது பிரித்தானிய இந்தியாவின் சோட்டாநாக்பூர் பகுதியில் உள்ளூர் பிரித்தானிய அதிகாரிகளின் கொள்கைகள் மற்றும் உள்ளூர் சமீன்தார்களின் சுரண்டல் வணிக நடைமுறைகளுக்கு எதிராக, பெரும்பாலும் ஓராவோன் இனத்தைச் சேர்ந்த மக்களால் நடத்தப்பட்ட ஓர் இயக்கமாகும்.[1][2][3][4][5] 1914 ஆம் ஆண்டு முதல் 1920 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இவ்வியக்கம் நடைபெற்றது.
சார்கண்டின் ராஞ்சி மாவட்டத்தில் வீர் இயாத்ரா பகத்தின் சிலை | |
காலம் | 1914 - 1920 |
---|---|
அமைவிடம் | சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் பீகார், தற்பொழுது சார்கண்டு இந்தியா |
வகை | சத்தியாகிரகம் |
ஏற்பாடு செய்தோர் | இயாத்ரா பகத்து , துரியா பகத்து மற்றும் பலர் |
பங்கேற்றோர் | தானா பகத்துகள், ஓராவோன், முண்டாக்கள் |
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான மகாத்மா காந்தியின் இதேபோன்ற இயக்கத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒத்துழையாமை இயக்க சத்தியாக்கிரகத்தை நடத்தி, பிரித்தானிய காலனி நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிகளை தானா பகத்து பழங்குடியின மக்கள் எதிர்த்தனர். தானா பகத்துகள் சமீன்தார்கள், பனியாக்கள், முசுலிம்கள், கிறித்துவ அமைப்புகள் மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். இவர்கள் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர்களாகவும் அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kumar, Sanjay (2008). "The Tana Bhagat Movement in Chotanagpur (1914-1920)". Proceedings of the Indian History Congress 69: 723–731. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44147236. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Sinha, S. P. (1993). Conflict and Tension in Tribal Society (in ஆங்கிலம்). Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-493-8. பார்க்கப்பட்ட நாள் 19 November 2021.
- ↑ Gupta, K. A. (13 December 2012). "Tana Bhagats want early solution to their problems | Ranchi News - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/ranchi/Tana-Bhagats-want-early-solution-to-their-problems/articleshow/17596646.cms.
- ↑ Bahadur), Sarat Chandra Roy (Rai (1915). The Oraons of Chota Nagpur: Their History, Economic Life, and Social Organisation (in ஆங்கிலம்). Crown Publications.
- ↑ 5.0 5.1 Dasgupta, Sangeeta (1999-02-01). "Reordering a World: The Tana Bhagat Movement, 1914-1919" (in en). Studies in History 15 (1): 1–41. doi:10.1177/025764309901500101. பன்னாட்டுத் தர தொடர் எண்:0257-6430.