தான்காயிட்டு-(Ce)
மாலிப்டேட்டுக் கனிமம்
தான்காயிட்டு-(Ce) (Tancaite-(Ce)) என்பது FeCe(MoO4)3•3H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மிகவும் அரியதோர் மாலிப்டேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.[1] இது இத்தாலியின் சார்தீனியா தீவில் உள்ள புண்டா டி சூ சீனார்கியு நகரப் பகுதியில் தான்காயிட்டு கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3] தான்காயிட்டு-(Ce) இன் சிவப்பு படிகங்கள் மாற்றியமைக்கப்பட்ட கனசதுரங்களை ஒத்திருக்கின்றன. ஆனால் கனிமமானது முக்கோண வடிவத்துடன் R-3 என்ற இடக்குழுவில் படிகமாயுள்ளது.[1] தான்காயிட்டு-(Ce) கிடைக்கும் பகுதியானது தோரியம் மாலிப்டேட்டுகளான இச்னுசைட்டு மற்றும் நூராகைட்டு உள்ளிட்ட பிற மாலிப்டேட்டு கனிமங்கள் கண்டறியப்பட்ட இடமாகும்.[4]
தான்காயிட்டு-(Ce) Tancaite-(Ce) | |
---|---|
பொதுவானாவை | |
வகை | மாலிப்டேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | FeCe(MoO4)3•3H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முக்கோணம் |
மேற்கோள்கள் | [1] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தான்காயிட்டு கனிமத்தை Tca-Ce[5]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Mindat
- ↑ Orlandi, P., and Bonaccorsi, E., 2010. Tancaite-(Ce), IMA 2009-097. CNMNC Newsletter, April 2010, 376; Mineralogical Magazine 74, 375-377
- ↑ "Tancaite-(Ce) - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
- ↑ "Punta de Su Seinargiu (Su Seinargiu; Su Senargiu), Sarroch, Cagliari Province, Sardinia, Italy - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.