நூராகைட்டு

தோரியம் மாலிப்டேட்டு கனிமம்

நூராகைட்டு (Nuragheite) என்பது Th(MoO4)2·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[2] இயற்கையாகத் தோன்றும் அரிய தோரியம் மாலிப்டேட்டு உப்பாக இது கருதப்படுகிறது. இத்தாலி நாட்டின் சர்தினியா தீவின் கேக்லியரி நகரத்தில் சரோச்சுப் பகுதியிலுள்ள சூ சீனார்கியூவில் நூராகைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[1] மற்றொரு தோரியம் மாலிப்டேட்டான இச்னுசைட்டும் இதே பகுதியிலேயே கண்டறியப்பட்டது. இது ஒரு முந்நீரேற்றாகும். [3]

நூராகைட்டு
Nuragheite
பொதுவானாவை
வகைமாலிப்டேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுTh(MoO4)2·H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது
படிக இயல்புமெல்லிய பலகைகள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்பு{100}, சரிபிளவு
விகுவுத் தன்மைநொறுங்கும்
மிளிர்வுமுத்து போன்றது
கீற்றுவண்ணம்வெண்மை
ஒப்படர்த்தி5.15 (கணக்கிடப்பட்டது)
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் நூராகைட்டு கனிமத்தை Nur[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது

தோற்றம்

தொகு

நூராகைட்டு என்பது மாலிப்டினம்-பிசுமத் கனிமமயமாக்கலின் ஒரு பகுதியாகும். இச்னுசைட்டு, மசுகோவிட்டு மற்றும் செனோடைம்-(Y) ஆகிய கனிமங்களுடன் இணைந்து நூராகைட்டு காணப்படுகிறது.[1]

தூய்மை

தொகு

வேதியியல் ரீதியாக நூரகைட்டு தூய்மையான கனிமமாகும்.[1]

கட்டமைப்பு

தொகு

நூராகைட்டின் படிக அமைப்பு மாலிப்டினத்தை மையப்படுத்திய நான்முகியும் தோரியத்தை மையப்படுத்திய 100 அடுக்கு பன்முகமும் கொண்டுள்ளது.[1] இது இச்னுசைட்டு கனிமத்தைப் போலவே உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Orlandi, P., Biagioni, C., Bindi, L., and Merlino, S., 2015. Nuragheite, Th(MoO4)2·H2O, the second natural thorium molybdate and its relationships to ichnusaite and synthetic Th(MoO4)2. American Mineralogist 100(1), 267-273
  2. 2.0 2.1 "Nuragheite - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
  3. Orlandi, Paolo; Biagioni, Cristian; Bindi, Luca; Nestola, Fabrizio (2014-10-01). "Ichnusaite, Th(MoO4)2·3H2O, the first natural thorium molybdate: Occurrence, description, and crystal structure" (in en). American Mineralogist 99 (10): 2089–2094. doi:10.2138/am-2014-4844. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-004X. http://ammin.geoscienceworld.org/content/99/10/2089. பார்த்த நாள்: 2016-03-12. 
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூராகைட்டு&oldid=4138206" இலிருந்து மீள்விக்கப்பட்டது