தான்ய மாணிக்கியா
திரிபுரா இராச்சியத்தின் அரசன்
(தான்ய மாணிக்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தான்ய மாணிக்கியா (Dhanya Manikya) என்பவர் 1490 முதல் 1515 வரை திரிபுரா ராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். இவர் காலத்தில் திரிபுர சுந்தரி கோயில் நிறுவப்பட்டது. [1]
தான்ய மாணிக்கியா | |
---|---|
தான்ய மாணிக்கியாவின் காலத்திய வெள்ளி நாணயம் (1514) | |
திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மன்னன் | |
ஆட்சிக்காலம் | 1490-1515 |
முன்னையவர் | முகுத் மாணிக்கியா |
பின்னையவர் | தவாஜா மாணிக்கியா |
Consort | கமலா தேவி |
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு | மாணிக்கிய வம்சம் |
தந்தை | முதலாம் ரத்ன மாணிக்கியா |
மதம் | இந்து சமயம் |
சுயசரிதை
தொகுஇவரது தளபதிகளான ரே கச்சாக் மற்றும் ரே கச்சம் ஆகியோரின் உதவியால், திரிபுராவின் பிராந்திய களத்தை கிழக்கு வங்காளத்திற்கு நன்கு விரிவுபடுத்தினார். முழு கொமிலா மாவட்டம் மற்றும் வங்காளதேசத்தின் சில்ஹெட், நவகாளி மற்றும் சிட்டகொங் மாவட்டங்களின் சில பகுதிகளின் தனது கட்டுப்பாட்டை நிறுவினார். [2]
தான்ய மாணிக்கியா பல கோவில்களை அமைத்தார். உதய்ப்பூரில் உள்ள திரிபுரசுந்தரி கோயில் அதில் முதன்மையானது. 1515 ஆம் ஆண்டு பெரியம்மை நோயால் இறப்பதற்கு முன் தன்யா இராணுவ வலிமையின் மூலம் ராச்சியத்தை பலப்படுத்தினார்.
இதனையும் கான்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "History of Tripura". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 31 May 2012.
- ↑ "Leading lights among the Manikyas". tripurainfo.com. Archived from the original on 3 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.