தான் செட்சுமன்

தான் செட்சுமன் (Dan Shechtman, எபிரேயம்: דן שכטמן), பிறப்பு: சனவரி 24, 1941, தெல் அவீவ், இசுரேல்), தெக்னியான் (Technion) எனப்படும் இசுரேலியத் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் பொருளறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் 2011 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்றார். இவர் கண்டுபிடித்த வியப்பூட்டும் அரை படிகத்திற்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது[1]. இவர் ஐயோவா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக உள்ளார். அமெரிக்க அரசின் ஆற்றல்சார் துறையைச் சேர்ந்த ஏம்சு ஆய்வுகூடத்தில் (Ames Laboratory) இணையாய்வராகவும் (Associate) உள்ளார். 1982 இல் தொடங்கிய நெடுவிடுப்பில், அமெரிக்காவில் உள்ள சீர்தரத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான நாட்டக உயர்நுட்பகத்தில் (National Institute of Standards and Technology) பணியாற்றிய பொழுது 1984 இல், இருபதுமுக முக்கோணக வடிவநிலையை (icosahedral phase) என்பதைக் கண்டுபிடித்தார், இதுவே பின்னர் சிரொன்றா ஆனால் சீரானதுபோல் தோற்றம் அளிக்கும் அடுக்கு முறை கொண்ட படிகத்தைக் கண்டுபிடித்தார்.[2].

தான் செட்சுமன்
Dan Shechtman
பிறப்புசனவரி 24, 1941 (1941-01-24) (அகவை 83)
தெல் அவீவ், இசுரேல்
வாழிடம்இசுரேல்
குடியுரிமைஇசுரேல்
துறைபொருளறிவியல்
பணியிடங்கள்ரைட் பேட்டர்ன் வான்படைத் தளம்
சான் ஆப்கின்சு பல்கலைக்கழகம்
NIST
ஐயோவா மாநிலப் பல்கலைக்கழகம்
தெக்னியான் - இசுரேல் தொழில்நுட்பக் கழகம்
கல்வி கற்ற இடங்கள்தெக்னியான் - இசுரேல் தொழில்நுட்பக் கழகம்
அறியப்படுவதுசீரொன்றாப் படிகம் (Quasicrystals)
விருதுகள்இயற்பியலுக்கான உவுல்ஃவ் பரிசு (1998)
இசுரேல் பரிசு (1999)
வேதியியலுக்கான நோபல் பரிசு (2011)
தான் செட்சுமனின் நோபல் பரிசு பெற்ற துறையைச் சார்ந்த சீரொன்றாப் படிகங்களில் ஒன்று. இதில் ஒரே சீரான அடுக்கம் இல்லை. இது வெள்ளி அணுக்களும் அலிமினிய அணுக்களும் சேர்ந்து உருவான கலவைப்பொருள், இதைப்பார்க்க சீராக இருப்பது போல் தோற்றம் அளிக்கும் ஆனால் சீரொன்றாத படிகம்

பரிசுகளும் பெருமைகளும்

தொகு
  • வேதியியல் நோபல் பரிசு சீரொன்றா படிகக் கண்டுபிடிப்புக்கு ("the discovery of quasicrystals") (2011).[1][3]
  • இயற்பியலுக்கான உவுல்ஃப் பரிசு (Wolf Prize) (1999).[4]
  • இயற்பியலுக்கான இசுரேல் பரிசு,(1998).[5]
  • 2008 ஐரோப்பிய பொருள் ஆய்வுEக் குமுகத்தின்(E-MRS) 25 ஆவது ஆண்டுப் பரிசு
  • 2002 இசுரேலின் வேதியிலுக்கான ஈமெட் பரிசு (EMET Prize)
  • 2000 கற்பித்தலின் சிறப்புக்காக மௌரியெல் மற்றும் தாவூது சாக்நௌ தெகினியான் பரிசு
  • 2000 சுவீடிய வேந்திய அறிவியல் உயர்கல்விக்கழகத்தின் (ராயல் சுவீடிசிய அக்காதெமி ஆப் சயன்சசு) கிரிகோரி அமினாஃவ்பரிசு.
  • 1993 வைசுமன் அறிவியல் பரிசு (Weizmann Science Award)
  • 1990 பொறியியல் இராத்சைல்டு பரிசு (Rothschild Prize)
  • 1988 தெக்னியானின்நியூ இங்கிலாந்து கல்வித்துறைப் பரிசு
  • 1988 அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் புதுப் பொருள்களுக்கான அனைத்துலகப் பரிசு.

அடிக்குறிப்புகளும் உசாத்துணையும்

தொகு
  1. 1.0 1.1 "Daniel Shechtman - Biographical". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.
  2. "Israeli Wins Chemistry Nobel For Quasicrystals". npr.org. Archived from the original on 2011-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.
  3. Asaf Shtull-Trauring, "Israel's Daniel Shechtman wins 2011 Nobel Prize in chemistry", Haaertz, October 4, 2011
  4. "Wolf Prize Recipients in Physics". Wolffund.org.il. Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.
  5. "Israel Prize Official Site - Recipients in 1998 (in Hebrew)".

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்_செட்சுமன்&oldid=3575379" இலிருந்து மீள்விக்கப்பட்டது