தாமசுகிளார்கைட்டு-(Y)
கார்பனேட்டு கனிமம்
தாமசுகிளார்கைட்டு-(Y) (Thomasclarkite-(Y)) என்பது (Na, Ce)(Y, REE)(HCO3)(OH)3·4(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய கனிமமான இது 1997 ஆம் ஆண்டு வரை யுகே-93 என அறியப்பட்டது. மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர் தாமசு எச். கிளார்க்கின் (1893-1996) நினைவாக இக்கனிமம் மறுபெயரிடப்பட்டது. கனடா நாட்டின் மாண்ட்-செயிண்ட்-இலேர் நகரத்தில் கிடைத்த பல அருமண் கனிமங்களில் இதுவும் ஒன்றாகும். கார பெக்மாடைட்டு பாறைகளின் இடையில் மட்டுமே இக்கனிமம் கிடைக்கிறது.
தாமசுகிளார்கைட்டு-(Y) Thomasclarkite-(Y) | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | (Na, Ce)(Y, அரு மண் தனிமங்கள்)(HCO3)(OH)3·4(H2O) |
இனங்காணல் | |
மோலார் நிறை | 375.77 கி/மோல் |
நிறம் | வெண்மை, மஞ்சள் |
படிக இயல்பு | போலி நாற்கோணம் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
இரட்டைப் படிகமுறல் | (101) இல் பொது |
பிளப்பு | [010] இல் சரிபிளவு, [101] பகுதி |
முறிவு | சமமற்றது |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 2–3 |
மிளிர்வு | பளபளக்கும் |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி கசியும், ஒளி ஊடுறுவும் |
ஒப்படர்த்தி | 2.30 |
ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சு எதிர்மறை 2V (அளக்கப்பட்டது) ≤ 5° |
ஒளிவிலகல் எண் | nα = 1.40, nβ = 1.540, nγ = 1.540 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.140 |
பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கம் 770 Bq/கிராம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தாமசுகிளார்கைட்டு-(Y) கனிமத்தை Tcl-Y[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://rruff.geo.arizona.edu/doclib/hom/thomasclarkitey.pdf Handbook of Mineralogy
- ↑ http://webmineral.com/data/Thomasclarkite-(Y).shtml Webmineral data
- ↑ http://www.mindat.org/min-7336.html Mindat
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.