தாமரைக் கால்
தாமரைக் கால் ("Lotus feet") அல்லது கால் கட்டுதல் (Foot binding) என்பது இளமங்கையரின் கால்களை மேலும் வளராதிருக்க மிகுந்த வலியேற்படும்வண்ணம் இறுகக் கட்டும் வழக்கத்தைக் குறிக்கின்றது. சீனப் பேரரசில் 10ஆவது அல்லது 11ஆவது நூற்றாண்டுகளில் உயர்நிலை அரசவை நடனக் கலைஞர்களிடம் இப்பழக்கம் துவங்கியிருக்கலாம். இவ்வழக்கம் சொங் அரசமரபு காலங்களில் அனைவரிடமும் பரவத் தொடங்கியது. காலைக் கட்டிக் கொள்ளுதல் ஓர் உயர்நிலைப் பண்பாக கருதப்படலாயிற்று. கால்களைப் பயன்படுத்தி வேலை செய்யத் தேவையில்லாத உயர்குடி மக்களிடையே மிகவும் புகழ் பெற்றிருந்தது. சீனப் பண்பாட்டில் அழகுக்குரிய அடையாளமாக இது ஏற்கப்பட்டது.
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
1664இல் மஞ்சூ பேரரசர் காங்சி இதற்குத் தடை விதிக்க முயன்று தோல்வியுற்றார்.[1] 1800களில் (19ஆவது நூற்றாண்டு), சீன சீர்திருத்தக்காரர்கள் இந்த வழக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்கள்; இருப்பினும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் இந்த வழக்கம் குறையலாயிற்று.[2] காலைக் கட்டிக் கொண்டிருந்ததனால் பலருக்கு வாழ்நாள் முழுமையும் குறைபாடு இருந்தது; இத்தகையக் குறைபாடுகளுடன் இன்றும் சில வயதான சீனக் கிழவிகளை காணவியல்கின்றது.[3]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Chinese Foot Binding". BBC.
- ↑ Ebrey, Patricia Buckley (2010). 'Cambridge Illustrated History of China (2nd ed.). New York: Cambridge University Press. pp. 160–161.
- ↑ Lim, Louisa (19 March 2007). "Painful Memories for China's Footbinding Survivors". Morning Edition. National Public Radio.
உசாத்துணைகள்
தொகு- Dorothy Ko, Cinderella’s Sisters: A Revisionist History of Footbinding. Los Angeles: University of California Press, 2005.
- Dorothy Ko, Every Step a Lotus: Shoes for Bound Feet (Berkeley: University of California Press, 2001). Catalogue of a museum exhibit, with extensive comments.
- Dorothy Ko, "Perspectives on Foot-binding," ASIANetwork Exchange, Vol. XV, No. 3, Spring 2008 [1] பரணிடப்பட்டது 2011-12-03 at the வந்தவழி இயந்திரம். Comments on the craft of shoemaking among women.
- Eugene E.Berg, MD, Chinese Footbinding. Radiology Review – Orthopaedic Nursing 24, no. 5 (September/October) 66–67
- Fan Hong (1997) Footbinding, Feminism and Freedom. London: Frank Cass
- The Virtual Museum of The City of San Francisco, Chinese Foot Binding – Lotus Shoes’’
- Ping, Wang. Aching for Beauty: Footbinding in China. New York: Anchor Books, 2002.
- Collection of bound foot shoes Article on Yang Shaorong, collector of bound foot shoes. Includes images of peasant/winter models and western-style models.