தாமரை அரண்மனை

அம்பியில் அமைந்துள்ள வரலற்று அரண்மனை

தாமரை அரண்மனை அல்லது சித்ராங்கி அரண்மனை ( Lotus Mahal or Chitrangi Mahal ) என்பது இந்தியாவின் அம்பியில் உள்ள ஒரு முக்கியமான மதச்சார்பற்ற கட்டிடமாகும். இது விஜயநகர கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மேலும், இது நேர்த்தியாக பூசப்பட்ட இரண்டு அடுக்கு கட்டிடமாகும். விஜயநகரப் பேரரசின் அரச குடும்பத்தின் எச்ச இடமாக இந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டது.[1]

தாமரை அரண்மனை
இந்தியாவின் வரலாற்றுச் சின்னம்
சித்ராங்கி அரண்மனை
தாமரை அரண்மனை (சித்ராங்கி அரண்மனை)
தாமரை அரண்மனை (சித்ராங்கி அரண்மனை)
விஜயநகரப் பேரரசு
கொடி
தாமரை அரண்மனை is located in கருநாடகம்
தாமரை அரண்மனை
தாமரை அரண்மனை
தாமரை அரண்மனை is located in இந்தியா
தாமரை அரண்மனை
தாமரை அரண்மனை
ஆள்கூறுகள்: 15°32′03″N 76°47′13″E / 15.53417°N 76.78694°E / 15.53417; 76.78694
தோற்றுவித்தவர்விஜயநகரப் பேரரசு
பெயர்ச்சூட்டுதாமரை மொட்டு அமைப்பு
தாமரை அரண்மனை
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஇந்திய- இசுலாமிய பாணி
இடம்பெல்லாரி மாவட்டம், கருநாடகம்
நாடுஇந்தியா
ஆள்கூற்று15°32′03″N 76°47′13″E / 15.53417°N 76.78694°E / 15.53417; 76.78694
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கைஇரண்டு மாடி

கட்டிடக்கலை

தொகு

"தாமரை அரண்மனை"யின் அமைப்பு விஜயநகரப் பேரரசின் அரச குடும்பத்திற்காக உருவாக்கப்பட்டது. அரண்மனை அரசவையின் மையத்திற்கு அருகில் ஒரு சுவர் வளாகத்தைச் சுற்றி நிற்கிறது. அமைப்பு நான்கு பக்கங்களிலும் சமமான திட்டங்களுடன் சமச்சீராக அமைக்கப்பட்டுள்ளது. குவிமாடம் திறந்த தாமரை மொட்டுகள் போன்று தோற்றத்தை அளிக்கிறது. அரண்மனையின் வளைவுகள் இஸ்லாமியக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டு, கடுமையான வானிலையிலிருந்து அரண்மனையைப் பாதுகாக்கின்றன. இது இரண்டு மாடிகளைக் கொண்டுள்ளது. இரண்டும் விரிவான பூச்சுகளால் சூழப்பட்ட பல விமானங்களில் வளைந்த திறப்புகளுடன் உள்ளன. இது மூலைகளில் மொத்தம் எட்டு பிரமிடு கோபுரங்களையும் கட்டமைப்பின் நடுவில் ஒரு பெரிய கோபுரத்தையும் கொண்டுள்ளது. மேலும், 24 தூண்களால் தாங்கப்படுகிறது. பிரமிடு கோபுரம் இந்தியக் கட்டிடக்கலையின் தாக்கத்தைக் கொண்டது. [2] இங்கிருக்கும் தூண்கள், கல்லினால் செதுக்கப்பட்ட நீர்வாழ் விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன [3]

அரண்மனை, சுடு செங்கற்கள் மற்றும் சாந்து மூலம் கட்டப்பட்டுள்ளது. தரை தளம் இருமடங்கு குறைக்கப்பட்ட கோணங்களுடன் கூடிய உயரமான அலங்கார கல் அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ளது. [4] [5]

வரலாறு

தொகு

இந்த அரண்மனை செனானா வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும், விஜயநகரப் பேரரசின் அரச பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. வரலாற்றுக் கணக்குகளின்படி, பேரரசின் அரச பெண்களின் பயன்பாட்டிற்கு இந்த அமைப்பு கட்டப்பட்டது. மன்னன் கிருஷ்ணதேவராயன் தனது மந்திரிகளை சந்திப்பதற்காக தனது சபை அறையாகவும் பயன்படுத்தினார். இந்த அரண்மனை அரச குடும்பத்தின் ஓய்வெடுக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. அம்பி படையெடுப்பின் போது பெரிய சேதம் எதுவும் ஏற்படாத சில கட்டமைப்புகளில் இதுவும் ஒன்று. [4] தக்காண சுல்தான்களின் பல படையெடுப்புகள் மற்றும் முறையற்ற பராமரிப்பின் காரணமாக, அரண்மனை பாழடைந்தது. மேலும், மறுசீரமைப்பு வேலைகளில் அதன் செதுக்கப்பட்ட அலங்காரத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்டது. [6]

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Incredible India | Lotus Mahal".
  2. "Architectural Highlights of the Lotus Mahal in Hampi, Vijayanagara Empire – The Talkative Man" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  3. "The Lotus Mahal, Vijayanagara". Archived from the original on 2019-09-17. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  4. 4.0 4.1 "Lotus Mahal Hampi | Kamal Mahal Hampi | Chitrangini Mahal" (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-04-25. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  5. "Lotus Mahal" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  6. "Vijayanagara Research Project::Lotus Mahal". பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_அரண்மனை&oldid=4108545" இலிருந்து மீள்விக்கப்பட்டது