தாமல் தாமோதரப் பெருமாள் கோயில்

தாமல் தாமோதரப் பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புட்குழி திருத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம்

தாமல் தாமோதரப் பெருமாள் திருக்கோயில்[1]
பெயர்
பெயர்:தாமல் தாமோதரப் பெருமாள் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:தாமல்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீ தாமோதரப் பெருமாள்
தாயார்:ஸ்ரீ திருமாலழகி (விஷ்ணு சுந்தரி)
தொலைபேசி எண்:9500911300, 044-29454882[1]

தாமோதரப்பெருமாள்

தொகு

யசோதையால் வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டவன் என்ற பொருளில் தாமோதரன் என்ற பெயர் கண்ணனுக்கு ஏற்பட்டது. மகரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க தாமல் திருத்தலத்தில் தாமோதரனாகக் காட்சி தருகின்றார். பழைமைக்குச் சான்றாக தாமல் பெருமானின் திருவயிற்றில் கயிறு பதிந்த தழும்பு கொண்ட அரிய அமைப்பாக உள்ளது. [1]

தாமல் பெயர்க்காரணம்

தொகு

மத்வ சம்பிரதாயத்தினரால் நிர்வகிக்கப்பட்டு, பின்னர் வைணவ சம்பிரதாயத்தினருக்கு மத்வ சம்பிரதாயத்தினரால் அளிக்கப்பட்ட திருக்கோயில் என்பதால் ’தான மல்லபுரம்’ என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் மருவி ’தாமல்’ என்றானது என தலவரலாறு கூறுகின்றது.

300 ஆண்டுகளுக்கு முன்னர் மத்வ சம்பிரதாயத்தினர் இத்திருக்கோயிலைக் காத்து நிர்வகித்து வந்ததன் பொருட்டு, இன்னமும் தாமல் பெருமாளுக்கு கோபி சந்தனம் இடும் முறையே வழக்கமாக உள்ளது.[1]

மூன்று திருத்தலங்கள்

தொகு

ஒரே நாளில், தாமல் தாமோதரப் பெருமாள், திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள், திருப்பாற்கடல் ரங்கநாதன் ஆகிய மூன்று திருத்தலப் பெருமாள்களையும் தரிசிப்பது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. இம்மூன்று திருத்தலங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.[1]

அமைவிடமும் பேருந்து வசதியும்

தொகு

சென்னை-வேலூர் சாலையில் பாலுசெட்டிசத்திரம் (திருப்புட்குழி) சென்றால், திருப்புட்குழியிலிருந்து தாமல் செல்ல பேருந்து வசதி உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 குமுதம் ஜோதிடம்; 2.08.2013;தாமதமின்றிக் கொடுப்பான் தாமல் தாமோதரப் பெருமான்; பக்கம் 1-3

வெளியிணைப்புகள்

தொகு