தாமசு புரூக் பெஞ்சமின்

(தாமஸ் புரூக் பெஞ்சமின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாமசு புரூக் பெஞ்சமின் (Thomas Brooke Benjamin) (15 ஏப்ரல் 1929 – 16 ஆகத்து 1995) என்பவர் ஒரு கணித இயற்பியலாளர் மற்றும் கணித வல்லுநரும் ஆவார்.மேலும் இவர் திரவ இயக்கவியல் மற்றும் கணிதப் பகுப்பாய்வுகளில் பெயர் பெற்றவர். குறிப்பாகத் தொகையற்ற வகையீட்டுச் சமன்பாடுகளின் (nonlinear differential equations) பயன்பாடுகளில் தனிச் சிறப்பு வாய்ந்தவர்.[1]

தாமசு புரூக் பெஞ்சமின்
பிறப்பு(1929-04-15)15 ஏப்ரல் 1929
வாலசி, இங்கிலாந்து
இறப்பு16 ஆகத்து 1995(1995-08-16) (அகவை 66)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைபாய்ம இயக்கவியல்
பகுவியல் (கணிதம்)
பணியிடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
எசெக்சு பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்லிவர்பூல் பல்கலைக்கழகம்
யேல் பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
சான் டுவையர்
ஆலன் சாம்ப்னீஸ்
அறியப்படுவதுபெஞ்சமின்-போனா-மாகோனி சமன்பாடு
பெஞ்சமின்-ஓனோ சமன்பாடு
பெஞ்சமின்-ஃபெயர் நிலையாமை

பிறப்பும் படிப்பும்

தொகு

இவர் இங்கிலாந்தில் உள்ள வாலிஸி(wallasey) எனும் ஊரில் 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் தேதி பிறந்தார். இவருக்கு 1955 ஆம் ஆண்டு கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தால் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[2][3][4] மேலும் இவர் 1979 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள கணித நிறுவனத்தில் இயற்கை தத்துவ (Natural Philosophy) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[5]

பெஞ்சமின் தமது 66ஆவது அகவையில், 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 16ஆம் தேதி இயற்கை எய்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. JulianHunt (2003). "Thomas Brooke Benjamin. 15 April 1929 – 16 August 1995 Elected FRS 1966". Biographical Memoirs of Fellows of the Royal Society 49: 39–67. doi:10.1098/rsbm.2003.0003. 
  2. கணித மரபியல் திட்டத்தில் தாமசு புரூக் பெஞ்சமின்
  3. O'Connor, John J.; Robertson, Edmund F., "தாமசு புரூக் பெஞ்சமின்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  4. BENJAMIN, Prof. (Thomas) Brooke. Who's Who. Vol. 2018 (online ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. (subscription required)
  5. "Benjamin, (Thomas) Brooke". Oxford Dictionary of National Biography (online). (2004). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/60105.  (Subscription or UK public library membership required.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_புரூக்_பெஞ்சமின்&oldid=3706195" இலிருந்து மீள்விக்கப்பட்டது