தாமஸ் பெக்கெட்
தாமஸ் பெக்கெட் அல்லது கேன்டர்பரி நகரின் தூய தாமஸ் பெக்கெட்[1] (21 டிசம்பர் c. 1118 (அல்லது 1120) – 29 டிசம்பர் 1170) என்பவர் கேன்டர்பரி பேராயராக 1162 முதல் 1170இல் கொலை செய்யப்படும் வரை இருந்தவராவார். கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஆங்கிலிக்க ஒன்றியம் இவரை புனிதர் என்றும் மறைசாட்சி என்றும் வணங்குகின்றது. 1162இல் கேன்டர்பரி பேராயரின் மறைவுக்குப்பின், தனக்குச் சாதகமாக இருப்பார் என்று கருதி, அப்போது இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருந்த இரண்டாம் ஹென்றி பெக்கெட்டை பேராயராகப் பரிந்துரைத்தார். மன்னருடன் திருச்சபையின் உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்த பூசல்களினால், இவரை மன்னரின் ஆட்கள் இவரின் மறைமாவட்டப் பேராலயத்திலேயே வெட்டிக்கொன்றனர். திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர் இவருக்கு புனிதர் பட்டமளித்தார். இவரின் விழா நாள் 29 டிசம்பர் ஆகும்.
புனித தாமஸ் பெக்கெட் | |
---|---|
கேன்டர்பரி பேராயர் | |
மறைமாநிலம் | கேன்டர்பரி |
மறைமாவட்டம் | கேன்டர்பரி |
ஆட்சி பீடம் | கேன்டர்பரி |
நியமனம் | 24 மே 1162 |
ஆட்சி துவக்கம் | 3 ஜூன் 1162 |
ஆட்சி முடிவு | 29 டிசம்பர் 1170 |
முன்னிருந்தவர் | பெக்கின் தியோபால்ட் |
பின்வந்தவர் | இராஜர் தெ பெய்லியு |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 2 ஜூன் 1162 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 3 ஜூன் 1162 பிலோய்ஸ் நகரின் ஹென்றி-ஆல் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | 21 டிசம்பர் c. 1118 Cheapside, இலண்டன் |
இறப்பு | கேன்டர்பரி | 29 திசம்பர் 1170
கல்லறை | கேன்டர்பரி மறைமாவட்டப் பேராலயம் |
குடியுரிமை | ஆங்கிலேயர் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
பெற்றோர் |
|
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | 29 டிசம்பர் |
ஏற்கும் சபை | |
பகுப்பு | ஆயர் மற்றும் மறைசாட்சி |
முத்திப்பேறு | 21 பெப்ரவரி 1173 திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்-ஆல் |
புனிதர் பட்டம் | 21 பெப்ரவரி 1173 புனித பேதுரு ஆலயம், செக்னி திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்-ஆல் |
பாதுகாவல் | எக்ஸ்டர் கல்லூரி ஆக்ஸ்போர்டு; போர்ட்ஸ்மவுத்; மறைமாவட்ட குருக்கள் |
திருத்தலங்கள் | கேன்டர்பரி மறைமாவட்டப் பேராலயம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Barlow Thomas Becket pp. 11–12