தாமஸ் ஹண்ட் மோர்கன்

தாமஸ் ஹன்ட் மோர்கன் (Thomas Hunt Morgan, செப்டம்பர் 25, 1866 - டிசம்பர் 4, 1945)[1] ஓர் அமெரிக்க பரிணாம உயிரியல், மரபியலர், முளையவியலாளர், மற்றும் அறிவியல் எழுத்தாளரான இவர் 1933 ஆம் ஆண்டில் உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[2]

தாமசு ஹண்ட் மோர்கன்
Thomas Hunt Morgan
பிறப்பு(1866-09-25)செப்டம்பர் 25, 1866
லெக்சிங்டன், கென்டக்கி
இறப்புதிசம்பர் 4, 1945(1945-12-04) (அகவை 79)
பாசடீனா, கலிபோர்னியா
தேசியம்ஐக்கிய அமெரிக்கர்
துறை
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
விருதுகள்
கையொப்பம்

மோர்கன் தனது 1890 ஆம் ஆண்டில் விலங்கியல் துறையில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.1900 ஆம் ஆண்டில் மெண்டலின் விதிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோர்கன் பழ ஈக்களின் டிரோசோபிலா மெலனோகாஸ்டரின் மரபணு பண்புகளை ஆய்வு செய்யத் தொடங்கினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில், மோர்கன் மரபணுக்கள் நிறப்புரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன என்பதை நிரூபித்தார்.

மோர்கன் தனது வாழ்க்கையில் 22 நூல்களையும் 370 அறிவியல் ஆவணங்களையும் எழுதினார். [1] கலிஃபோர்னியா தொழில் நுட்பக் கழகத்தில் அவர் நிறுவிய உயிரியல் பிரிவுகளில் பயின்ற ஏழு மாணவர்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்..

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

கென்டக்கியின் லெக்சிங்டனில் சார்ல்டன் ஹன்ட் மோர்கன் மற்றும் எலன் கீ ஹோவர்ட் மோர்கன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். [2] [3] அவரது தாத்தா ஜான் வெஸ்லி ஹன்ட் மில்லியனராக இருந்தார்.

தனது 16 ஆம் வயதில் மோர்கன் கென்டக்கி மாநிலக் கல்லூரியில் (இப்போது கென்டக்கி பல்கலைக்கழகம் ) பயின்றார். அவர் அறிவியலில் கவனம் செலுத்தினார்; அவர் குறிப்பாக இயற்கை வரலாற்றில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார்.ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையுடன் கோடைகாலத்தில் பணிபுரிந்தார்1886 ஆம் ஆண்டில் இவர் இளங்கலைப் பட்டம் பெற்றார். [4] மோர்கன் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் சேர்ந்தார். மோர்கன் 1888 ஆம் ஆண்டில் கென்டக்கி மாநிலக் கல்லூரியில் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற தகுதி பெற்றார்.

விருதுகள் மற்றும் கவுரவங்கள்

தொகு

1933 ஆம் ஆண்டில் உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ முனைவர் பட்டத்தினை அளித்தது. அவர் 1909 இல் தேசிய அறிவியல் அகாதமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

அவர் 1919 இல் ராயல் சொசைட்டியின் (ஃபோர்மெம்ஆர்எஸ்) அயல்நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] 1924 இல் மோர்கன் டார்வின் பதக்கத்தைப் பெற்றார் .

அமெரிக்காவின் மரபியல் சங்கம் ஆண்டுதோறும் தாமஸ் ஹன்ட் மோர்கன் பதக்கத்தை அவரது நினைவாக வழங்கி வருகிறது. 1989 ஆம் ஆண்டில் சுவீடனில் இவரது தபால் தலை வெளியிடப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மோர்கனின் நினைவாக வாஷிங்டனின் கடற்கரையில் உள்ள ஒரு இளையோர் உயர்நிலைப் பள்ளிக்கு அவரது பெயரிடப்படடது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஜூன் 4, 1904 இல், மோர்கன் லிலியன் வாகன் சாம்ப்சன் என்பவரைத் (1870-1952) திருமணம் செய்து கொண்டார். அவர் அதே ஆண்டில் மோர்கன் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.இந்தத் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் இருந்தபோது, இவரது மனைவி தனது அறிவியல் பணிகளை ஒதுக்கி வைத்தார். பின்னர் அவர் மோர்கனின் ட்ரோசோபிலா வேலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அவர்களின் நான்கு குழந்தைகளில் (ஒரு மகன் மற்றும் மூன்று பெண்கள்) ஒருவரான 1911 ஆம் ஆண்டில் பிறந்த இசபெல் மோர்கன் இளாம்பிள்ளை வாத ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸில் வைராலஜிஸ்ட் ஆனார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Thomas Hunt Morgan. 1866-1945. 
  2. 2.0 2.1 "The Nobel Prize in Physiology or Medicine 1933". Nobel Web AB. பார்க்கப்பட்ட நாள் 2010-09-14.
  3. Sturtevant (1959), p283.
  4. Allen (1978), pp11-14, 24.
  5. "Thomas Morgan". Nasonline.org. பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_ஹண்ட்_மோர்கன்&oldid=2894289" இலிருந்து மீள்விக்கப்பட்டது