தாம்பாரா ஏரி

தம்பாரா ஏரி (Tampara Lake) என்பது 300-எக்டேர் (740-ஏக்கர்) நன்னீர் ஏரியாகும். இது இந்தியாவின் ஒடிசாவில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் மாவட்டத் தலைமையகமான சத்ராபூருக்கு அருகில் உருசிகுல்யா ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. இது பெர்காம்பூர் நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நன்னீர் ஏரி உருசிகுல்யா ஆறுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆற்றிலிருந்து வரும் வெள்ள நீர் இதன் பல்லுயிர் பெருக்கத்தை வளப்படுத்துகிறது. இதனால் இந்த ஈரநிலம் 60 வகையான பறவைகள் மற்றும் 46 மீன் சிற்றினங்களை ஆதரிக்கிறது. மழைக்காலத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. சதுப்புநிலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. மேலும் விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கும் அத்துடன் உள்ளூர் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான பாதையை வழங்குவதற்கும் தண்ணீர் பயன்படுகிறது. சத்ரபூர் நகரமும் இந்த ஏரி நீரைக் குடிநீருக்காகக் பயன்படுத்துகிறது. தற்போது இந்த ஏரியானது இந்தியத் தரைப்படையின் நீர் நடவடிக்கைகள் பயிற்சி மையமான நீர் விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலாவுக்காகத் தளத்தில் படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.[2][3] 2021ஆம் ஆண்டு முதல் இந்த ஏரி பாதுகாக்கப்பட்ட ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பாரா ஏரி
Tampara Lake
ஒடிசாவில், அன்சுபா ஏரி
ஒடிசாவில், அன்சுபா ஏரி
தாம்பாரா ஏரி
Tampara Lake
அமைவிடம்சத்ராபூர், ஒடிசா
ஆள்கூறுகள்19°21′N 84°59′E / 19.35°N 84.98°E / 19.35; 84.98
வகைநன்னீர் ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்5.4 km (3.4 mi)
அதிகபட்ச அகலம்0.65 km (0.40 mi)
மேற்பரப்பளவு300 ha (740 ஏக்கர்கள்)
குடியேற்றங்கள்சத்ராபூர்
Designations
Invalid designation
அலுவல் பெயர்தாம்பாரா ஏரி
தெரியப்பட்டது12 அக்டோபர் 2021
உசாவு எண்2489[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tampara Lake". Ramsar Convention Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 5 November 2022.
  2. "Tampara Lake". PIB. பார்க்கப்பட்ட நாள் 5 November 2022.
  3. "Humuri Tampara- A Sweet Water Lake". ganjam.nic.in. பார்க்கப்பட்ட நாள் 5 November 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்பாரா_ஏரி&oldid=3778947" இலிருந்து மீள்விக்கப்பட்டது