தாய்மொழி (சஞ்சிகை)
தாய்மொழி சிறிது காலம் ஈழத்திலிருந்து வெளியான ஒரு தமிழ் சஞ்சிகை. 1999ம் வருடம் சித்திரைப் புது வருட தினத்தில் வெளியானது.. பிரபல தமிழ் சஞ்சிகைகளான குமுதம், ஆனந்த விகடன் சாயலில் மாதம் இருமுறை வெளியானது. இதன் ஆசிரியர் உமாபாஸ்கரன், இணையாசிரியர் கா. தேவேந்திரராசா. அரசியற் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், பொது அறிவு, போட்டி மற்றும் சினிமா விடயங்களை கொண்டிருந்தது. இலங்கையின் பத்திரிகைப் பரிமாணத்தில் தாய்மொழியைப் போன்று சகல அம்சங்களையும் கொண்ட சஞ்சிகையைக் காணவில்லையென யாழ்ப்பாண பல்கலைக் கழக பதிவாளர் செங்கை ஆழியான் க. குணராசா ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார். தாய்மொழி பதிவு செய்த பல அரசியற் கட்டுரைகள் பலத்த தாக்கங்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அரசியல்வாதிகளின் எச்சரிக்கையினால் தொடர முடியாமல் நிறுத்தப்பட்டது. தாய்மொழிக்குத் தடா எனத் தலைப்பிட்டு சரிநிகர் பத்திரிகை தனது ஆதங்கத்தினை கவலையுடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.