தாய்லாந்து பொதுத் தேர்தல், 2019


தாய்லாந்து பொதுத்தேர்தல், 2019 என்பது தாய்லாந்து நாட்டில் 2014ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதன் மூலம் பிரயுத் சென்-ஓ-ச்சா பிரதமராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நடைபெற்ற தேர்தலாகும். 2017ஆம் ஆண்டு இராணுவத்தால் உருவாக்கபப்ட்ட புதிய அரசியலைமைப்பு சட்டத்தின் படி இத்தேர்தல் நடைபெற்றது. இதன்மூலம் பிரதிநிதகள் அவையில் உள்ள 500 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தாய்லாந்து பொதுத் தேர்தல் 2019

← 2014 (செல்லாது) 24 மார்ச் 2019

பிரதிநிதிகள் அவையில் உள்ள 500 இடங்கள்

அதிகபட்சமாக 251 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்த வாக்காளர்கள்51,239,638
வாக்களித்தோர்38,268,366 (74.69%)
அறிவிக்கப்பட்டது
94%
25 மார்ச் 2019, 17:00 GMT+7 தரவுகளின் படி
  First party Second party Third party
 
வேட்பாளர் சுடாரத் கெயுராப்பன் பிரயுத் சன்-ஓச்சா
(தனி வேட்பாளர்)
தனாத்தோர்ன் ஜுவாங்குருங்
குருவாங்கிட்
கட்சி பியூ தாய் பலங்க் பிரசாரத் எதிர்கால முன்னேற்றம்
முந்தைய
தேர்தல்
265 இடங்கள்; 48.41% புதிய கட்சி புதிய கட்சி
வென்ற
தொகுதிகள்
137 118 87
மாற்றம் 128 - -
மொத்த வாக்குகள் 7,920,630 8,433,137 6,265,950

  Fourth party Fifth party
 
வேட்பாளர் அபிஷித் வெஜ்ஜாஜீவா அனுத்தின் சர்ன்விரக்குல்
கட்சி மக்களாட்சி பூம்ஜெய்தாய்
முந்தைய
தேர்தல்
159 இடங்கள்; 35.15% 29 இடங்கள்; 3.94%
வென்ற
தொகுதிகள்
54 52
மாற்றம் 105 Increase 23
மொத்த வாக்குகள் 3,947,726 3,732,883

முந்தைய பிரதமர்

பிரயுத் சன்-ஓ-ச்சா
அமைதி மற்றும் ஒழுங்குக்கான தேசிய ஆட்சிக்குழு

பிரதமராகப் பதவியேற்கவுள்ளவர்

TBD

இத்தேர்தலில் பியூ தாய் கட்சி மற்றும் மக்களாட்சி ஆகிய இரு பெருங்கட்சிகளும் பலங்க் பிராசரத், எதிர்கால முன்னேற்றம் போன்ற புதுக்கட்சிகளும் உட்பட மொத்தம் 77 கட்சிகள் போட்டியிட்டன. பலாங் பிரசாரத் கட்சியின் வேட்பாளராக பிரயுத்-சன்-ஓச்சா அறிவிக்கப்பட்டாலும் அவர் தனி வேட்பாளராகவே கருதப்பட்டார். பியூ தாய்க் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைமை வியூகத் தலைவரான சுடாரத் கெயுராப்பன் அறிவிக்கப்பட்டார்.

இத்தேர்தலில் புதிய முறைப்படி மக்கள் தங்கள் தொகுதி மற்றும் தேசிய கட்சிப் பட்டியல் ஆகிய இரண்டிற்கும் சேர்த்து ஒன்றாக வாக்களித்தனர். புதிய அரசியலமைப்பு சட்டப்படி கீழவை மற்றும் மேலவை ஆகிய இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரே பிரதமராக பதவியேற்க இயலும். இதில் 250 மேலவை உறுப்பினர்களும் இராணுவத்தால் நியமிக்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

24 மார்ச் 2019 அன்று நடைபெற்ற தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவு நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 64.69% மட்டுமே வாக்குப்பதிவு நிகழ்ந்தது. அதற்கடுத்த நாளன்று தேர்தல் ஆணையம் 350 இடங்களுக்கான அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிட்டது. மற்ற 150 இடங்களுக்கான முடிவுகள் 29 மார்ச் 2019 அன்று வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இத்தேர்தலின் அதிகாரப்பூர்வமான முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகும். தாய்லாந்து வழக்கப்படி அந்நாட்டு மன்னரின் முடிசூட்டும் நிகழ்விற்குப் பிறகே அதிகாரப்பூர்வமான முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட முடிவுகளின் படி மக்கள் வாக்குக்களை அதிகம் பெற்ற பலங்க் பிரசாரத் கட்சி 119 இடங்களைக் கைப்பற்றியது. எனினும் பியூ தாய் கட்சி 137 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எதிர்கால முன்னேற்றக் கட்சி 87 இடங்களிலும் மக்களாட்சிக் கட்சி 54 இடங்களிலும் பூம்ஜெய்தாய் கட்சி 52 இடங்களிலும் வென்றன. நான்காவது இடம் பெற்ற மக்களாட்சிக் கட்சியின் மோசமான தோல்வியை அடுத்து முன்னாள் பிரதமர் அபிஷித் வெஜ்ஜஜீவா அக்கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.

முதற்கட்ட முடிவுகள்

தொகு
கட்சி வாக்குகள் % இடங்கள்
தொகுதி கட்சிப் பட்டியல் மொத்தம்
பியூ தாய்க் கட்சி 7,920,630 22.29 137 0 137
பலங்க் பிரசாரத் கட்சி 8,433,137 23.73 97 21 118
எதிர்கால முன்னேற்றக் கட்சி 6,265,950 17.63 30 57 87
மக்களாட்சிக் கட்சி 3,947,726 11.11 33 21 54
பூம்ஜெய்தாய்க் கட்சி 3,732,883 10.51 39 13 52
தாய் தாராளவாதக் கட்சி 826,530 2.33 0 11 11
சர்டாய்ப்பட்டானாக் கட்சி 782,031 2.20 6 5 11
புதிய பொருளாதாரக் கட்சி 485,664 1.37 0 6 6
பிரசாச்சர்ட் காட்சி 485,436 1.37 6 0 6
புயி சாட் கட்சி 419,393 1.18 0 5 5
தாய்லாந்து செயல் கூட்டணி 416,324 1.17 1 4 5
சார்ட் பட்டானா கட்சி 252,044 0.71 1 2 3
தாய் உள்ளூர் சக்திக் கட்சி 213,129 0.59 0 2 2
தாய் வனப் பாதுகாப்புக் கட்சி 136,597 0.39 0 1 1
தாய் மக்கள் சக்திக் கட்சி 81,733 0.23 0 1 1
தாய் தேசிய சக்திக் கட்சி 73,871 0.21 0 1 1
மற்ற கட்சிகள் 1,059,569 2.98
மொத்தம் 35,532,647 100 350 150 500
செல்லாத வாக்குகள் 2,130,327 5.57
நோட்டா 605,392 1.58
வாக்களித்தோர் 38,268,366 74.69
மொத்த வாக்காளர்கள் 51,239,638
சான்று: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Vote 62".