தாராபாரதி

தாரா

துரைசாமி இராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட "கவிஞாயிறு " தாராபாரதி (26 பிப்ரவரி 1947 – 13 மே 2000) ஒரு தமிழ்நாட்டுக் கவிஞரும் ஆசிரியரும் ஆவார்.

தொடக்க வாழ்க்கை

தொகு

இன்றைய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொவளை என்னும் சிற்றூரில் 26 பிப்ரவரி 1947 அன்று புஷ்பம் அம்மாள் - துரைசாமி இணையருக்கு இரண்டாம் மகனாகப் பிறந்த தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். இவர் அண்ணன் பெயர் 'மலர் மகன்' (எ) சீனிவாசன். தம்பியின் பெயர் மாதவன்.[1][2][3]

34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

தனி வாழ்க்கை

தொகு

தாராபாரதியின் இணையர் பெயர் சந்தானலட்சுமி. இவர்களுக்கு விவேகாநந்தன், லோகுதுரை, ஆண்டாள் ஆகிய பிள்ளைகள் பிறந்தனர்.

மறைவு

தொகு

தாராபாரதி, 13 மே 2000 அன்று தன் 54-ஆம் அகவையில் காலமானார்.

படைப்புகள்

தொகு
  1. புதிய விடியல்கள் (1982)
  2. இது எங்கள் கிழக்கு (1989)
  3. விவசாயம் இவர் வேதம் (1992)
  4. பண்ணைபுரம் தொடங்கி பக்கிங்காம் வரை (1993)
  5. கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் (2000 ; 2007)
  6. பூமியைத் திறக்கும் பொன்சாவி (2001)
  7. இன்னொரு சிகரம் (2002)
  8. வெற்றியின் மூலதனம் (2004)
  9. திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
  10. விரல்நுனி வெளிச்சங்கள்

புகழ்

தொகு

"கவிஞாயிறு " என்ற சிறப்புப் பெயரால் அறியப்படுகிறார் தாராபாரதி.

இவரது ஆசிரியர் சேவைக்காகத் தமிழ்நாட்டு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.

தமிழ்நாட்டு அரசு 2010-11 காலகட்டத்தில் இவரது நூல்களை நாட்டுடைமையாக்கியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "கவி ஞாயிறு... தாராபாரதி பிறந்த தினம் இன்று...!!". Seithipunal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
  2. "வரலாற்றில் இன்று(13.05.2020)... கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று !" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-13. Archived from the original on 2022-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
  3. "கவிஞாயிறு தாராபாரதி நூல்கள்". web.archive.org. 2012-08-29. Archived from the original on 2012-08-29. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராபாரதி&oldid=4111971" இலிருந்து மீள்விக்கப்பட்டது