தாரா சந்து (Tara Chand) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும் ஆவார். இவர் 2009 முதல் 2014 வரை சம்மு காசுமீர் துணை முதல்வராகப் பதவி வகித்தார். முன்னதாக இவர் சம்மு காசுமீர் சட்டமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றினார்.[2][3]

தாரா சந்து
துணை முதல்வர் சம்மு காசுமீர்
பதவியில்
5 சனவரி 2009 – 24 திசம்பர் 2014
ஆளுநர்நரேந்தர் நாத் வோரா
முதலமைச்சர்உமர் அப்துல்லா
முன்னையவர்முசாபர் உசைன் பெய்க்
பின்னவர்நிர்மல் குமார் சிங்
தொகுதி80-சாம்ப்
சபாநாயகர் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றப் பேரவை
பதவியில்
21 நவம்பர் 2002 – 5 ஜனவரி 2009
முன்னையவர்அப்துல் அகாத் வாகில்
பின்னவர்முகமது அக்பர் லோன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1963
சாக் மலைக் கிராமம்,[1] அக்னூர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி
துணைவர்காந்தா தேவி
பிள்ளைகள்2
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்www.facebook.com/tarachand.inc

2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஜம்மு மாவட்டத்தின் சாம்ப் சட்டமன்றத் தொகுதியில் சந்து, போட்டியிட்டபோது பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மருத்துவர் கிருஷ்ண லாலியிடம் தோல்வியுற்றார்.[4]

30 ஆகத்து 2022 அன்று, குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரசிலிருந்து விலகினார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Tara Chand – Dalit face of the party". http://www.tribuneindia.com/news/jammu-kashmir/politics/profiles-of-raman-bhalla-and-tara-chand/5733.html. 
  2. From Speaker to likely Deputy CM: Tara Chand steers Cong ship in J&K - Indian Express
  3. J&K Deputy CM uses 25 official cars instead of two authorised: RTI - IBNLive
  4. "J&K poll result: Deputy CM and three-time MLA Tara Chand loses". Firstpost. 23 December 2014. பார்க்கப்பட்ட நாள் 13 November 2015.
  5. "Tara Chand, Majid Wani among 60 leaders quit Congress party in favour of Ghulam Nabi Azad". The Chenab Times. 30 August 2022. https://thechenabtimes.com/2022/08/30/tara-chand-majid-wani-among-60-leaders-quit-congress-party-in-favour-of-ghulam-nabi-azad/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_சந்து&oldid=3658196" இலிருந்து மீள்விக்கப்பட்டது