தாரா சந்து (தொல்லியலாளர்)

தாரா சந்து (Tara Chand (பிறப்பு 17 ஜூன் 1888 சியால்கோட்; இறப்பு 14 அக்டோபர் 1973) என்பவர் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் நிபுணத்துவம் பெற்ற வரலாற்றாசிரியர் ஆவார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் 1940களில் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.[1]

சந்து ஈரானுக்கான இந்தியத் தூதராகவும்[1][2] மற்றும் இந்திய அரசாங்கத்தின் கல்வி ஆலோசகராகவும் பணியாற்றினார்.[3]

தனிமனித தகவல்

தொகு

தாரா சந்தின் தந்தை முன்சி கிருபா நாரின் ஆவார். இவர் 1951 முதல் 1956 வரை தெகுரானுக்கு இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். இவருக்குப் பின் டி: பத்ருதீன் தியாப்ஜி (டிப்ளமோட்) இப்பதவியில் நியமிக்கப்பட்டார்.[4]

வெளியீடுகள்

தொகு
  • Chand, Tara (1922). Influence of Islam on Indian Culture. Read Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781406730401.
  • Chand, Tara (1966). Material and ideological factors in Indian history. University of Allahabad. Archived from the original on 2014-02-28. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  • Chand, Tara (1967). History of the Freedom Movement in India. Publications Division, Ministry of Information and Broadcasting.
  • Chand, Tara (1979). Society and State in the Mughal Period. Book Traders.

அங்கீகாரம்

தொகு

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தாரா சந்தின் நினைவாக விடுதி ஒன்று நிறுவப்பட்டது.[5] பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் இவரது பெயரில் கலவி உதவித்தொகை வழங்குகிறது.[6] இவரது பெயரில் வரலாற்றுக்கான தாரா சந்து தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. 1973இல் நடைபெற்ற மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அகில இந்திய மேல்நிலைத் தேர்வில் வரலாற்றில் அதிக மதிப்பெண்களைப் பெற்றதற்காக தாரச் சந்து தங்கப் பதக்கம் சந்திரரேக மந்திரிக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Ex-Vice Chancellors". Allahabad University. பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.
  2. "History of the Department of Political Science". Allahabad University. பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.
  3. "Ambassador Chand Will Talk Here at Summer Conference". http://www.thecrimson.com/article/1952/4/28/ambassador-chand-will-talk-here-at/. 
  4. CHAND, DR. TARA: M.A., Ph.D.; Nominated; s. of Shri K. Kripa Narain; b. at Sialkot (W. Pakistan), 17 June 1888; ed. at St. Stephen's College, Delhi, Meerut College, Meerut, Muir Central College, Allahabad and Queen's College, Oxford, Oxford University; m. Shrimati Maha Devi, b. 1905; 1 s. and 1 d.; Professor of History, Kayastha Pathshala Allahabad University, 1947-48; Secretary and Educational Adviser to the Government of India, 1948 — 51; President, Secondary Education Conference; Secretary, Hindustani Academy, U.P.; President, Indian History Congress; Ambassador of India in Iran, 1951 — 56; Chairman, Chand served as head of the Political Science department of Allahabad University from 1945 to 1947, when he was appointed Vice-Chancellor of the university. Who's who, Volume 9, Rajya Sabha (Indian Parliament) 1966, p. 49, TARA CHAND; Historian (b. Sialkot, Pakistan, 17 June 1888; d. 14 Oct. 1973): Chairman, History of Freedom Movement Unit, GOI, and V.C. of Allahabad University. Son of Munshi Kripa Narain. Had one son and one daughter.
  5. "List of hostels". University of Allahabad. பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.
  6. "Allahabad Alumni Association". பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.