தாரா தியோதர்

இறகுப்பந்து மற்றும் டென்னிசு வீரர்

தாரா தியோதர் (Tara Deodhar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் இறகுப்பந்து வீராங்கனையாவார். டென்னிசு விளையாட்டிலும் இவர் ஒரு சிறந்த வீராங்கனையாக இருந்தார். இந்தியாவின் துடுப்பாட்ட விளையாட்டு வீரர் திங்கர் பல்வந்து தியோதரின் மகளாகவும் இவர் அறியப்படுகிறார். 1924 ஆம் ஆண்டு தாரா தியோதர் பிறந்தார்.

தாரா தியோதர்
Tara Deodhar
தாரா தியோதரும் சுந்தர் தியோதரும்
நேர்முக விவரம்
நாடு இந்தியா
பிறப்புபுனே, மகாராட்டிரம்

கல்வி தொகு

1946 ஆம் ஆண்டு தாரா தியோதர் அமெரிக்காவின் விசுகான்சின் பல்கலைக்கழகத்தில் படித்தார்.

தொழில் தொகு

தாரா தியோதர் தனது சகோதரி சுந்தர் தியோதருடன் இணைந்து 1942 ஆம் ஆண்டு இறகுப்பந்தாட்டப் பெண்கள் இரட்டையர் பிரிவில் தனது முதல் தேசிய பட்டத்தை வென்றார். 1942 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தியோதர் சகோதரிகள், சுமன், சுந்தர் மற்றும் தாரா ஆகியோர் இந்திய தேசிய இறகுப்பந்து வெற்றியாளர் போட்டிகளின் அனைத்துப் பிரிவு போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தினர்.[1][2] மூத்தவரான தாரா 1942-1944 ஆம் ஆண்டு காலத்தில் ஒற்றையர் பட்டத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வென்று சாதனை படைத்தார்.

தாரா ஒரு வலுவான டென்னிசு வீரராகவும் இருந்தார். விசுகான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது,[3] அமெரிக்க டென்னிசு வெற்றியாளர் கோப்பை போட்டியில் வெளிநாட்டு டென்னிசு வீரர்களில் தாரா தியோதர் ஐந்தாவது இடத்தைப் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. Badminton Association of India. "List of Indian National Championship Winners". Archived from the original on 26 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 22 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Sports Team (13 March 2011). "The Other Trailblazers". தி இந்து. http://www.mid-day.com/articles/the-other-trailblazers/115245. பார்த்த நாள்: 22 August 2014. 
  3. Schoenfeld, Clay (March 1946). "There's an international set on campus". Wisconsin alumnus 46 (6): 5–6. http://digicoll.library.wisc.edu/cgi-bin/UW/UW-idx?type=div&did=UW.v47i6.i0005&isize=text. பார்த்த நாள்: 22 August 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_தியோதர்&oldid=3930780" இலிருந்து மீள்விக்கப்பட்டது