தார்ச்சவ்னா

இந்திய வரலாற்றாசிரியர்

தார்ச்சவ்னா (Darchhawna) வடகிழக்கு இந்திய மாநிலமான மிசோரத்தைச் சேர்ந்த ஒரு வரலாற்றாசிரியர் ஆவார். இந்தி மொழியில் இவர் எழுதுகிறார்.[1] 1936 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் பிறந்தார்.[1] வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தின் மிசோரம் வளாகமாக இருந்தபோது தார்ச்சவ்னா மிசோரம் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பணியில் இருந்த முன்னாள் அதிகாரி ஆவார். மிசோ வரலாற்று சங்கத்தின் நிறுவனர் தலைவராகவும் இருந்தார்.[2] பல முறை இந்த அமைப்பின் தலைவர் பதவியை வகித்தார். 2013 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பதவியை தொடர்ந்து வகிக்கிறார்.[3] இந்திய இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு தார்ச்சவ்னாவிற்க்கு 2005 ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமக்கள் விருதை வழங்கி சிறப்பித்தது.[4][5]

தார்ச்சவ்னா
Darchhawna
பிறப்பு1 சனவரி 1936 (1936-01-01) (அகவை 88)
மிசோரம், இந்தியா
பணிஎழுத்தாளர்
வரலாற்றாளர்
விருதுகள்பத்மசிறீ

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Prof. Darchhawna". Indian Autographs. 2015. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015.
  2. "Brief History of MHA". Mizo History Association. 2015. Archived from the original on 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Office Bearers of MHA". Mizo History Association. 2015. Archived from the original on 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  5. "Padma Awards 2005" (in en). OutlookIndia. https://www.outlookindia.com/website/story/padma-awards-2005/226328. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்ச்சவ்னா&oldid=3930787" இலிருந்து மீள்விக்கப்பட்டது