தாலியம் மூவயோடைடு

வேதிச் சேர்மம்

தாலியம் மூவயோடைடு (Thallium triiodide) என்பது TlI3 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. மற்ற தாலியம் மூவாலைடுகள் போலல்லாமல் தாலியம் மூவயோடைடு தாலியம்(III) அயனியையும் மூவயோடைடு எதிர்மின் அயனியையும் I
3
. கொண்டுள்ளது.

தாலியம் மூவயோடைடு
Thallium triiodide
தாலியம் மூவயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாலியம்(I) (மூவயோடைடு)
வேறு பெயர்கள்
தாலசு மூவயோடைடு
இனங்காட்டிகள்
60488-29-1 Y
13453-37-7
ChemSpider 14888331
EC number 236-627-3
InChI
  • InChI=1S/I3.Tl/c1-3-2;/q-1;+1
    Key: CFEVJLSKLTWQJS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20233350
  • [Tl+].I[I-]I
பண்புகள்
I3Tl
வாய்ப்பாட்டு எடை 585.09 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H330, H373, H411
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வினையில் Tl+ ஏன் Tl3+ ஆக ஆக்சிசனேற்றம் செய்யப்படவில்லை என்பதற்கான காரணம்

Tl3+ + 2 I → Tl+ + I2

அரை கலங்களின் நிலையான ஒடுக்கத்திறல் சாத்தியங்களைக் கருத்தில் கொண்டு பெறலாம். அவை:

Tl3+ + 2e− → Tl+; Er° = 1.252
I2 + 2e → 2 I Er° = 0.5355

எனவே ஒடுக்க வினையான Tl3+ to Tl+ (1.252 > 0.5355) என்ற அளவில் உள்ளது.

அணைவுச் சேர்மம் உருவாக்கம் மற்றும் கரைப்பானேற்றம் போன்ற காரணிகள் வினையைப் பாதிக்கலாம் என்பதால் இந்த வழியில் நிலையான மின்முனை ஆற்றல்களைப் பயன்படுத்துவது எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும். தாலியம் மூவயோடைடும் விதிவிலக்கல்ல. ஏனெனில் அதிகப்படியான I டெட்ரா அயோடோதாலேட்டை ((TlI
4
)) உருவாக்குவதால் தாலியம்(III) அயனியை நிலைப்படுத்த முடியும். இது டெட்ரா அயோடோமெர்க்குரேட்டு மற்றும் ஈய டெட்ரா அயோடைடு சேர்மங்களுடன் சம எலெக்ட்ரான் அமைப்புடையதாகத் திகழ்கிறது.

கட்டமைப்பு

தொகு

TlI3 ஆனது Tl+I3 என முறைப்படுத்தப்படுகிறது. NH4I3, CsI3 மற்றும் RbI3 போன்ற சேர்மங்களின் கட்டமைப்பை ஒத்ததாகவும் உள்ளது.[1] TlI3 இல் காணப்படும் மூவயோடைடு அயனி கிட்டத்தட்ட நேர்கோட்டு வடிவமைப்பில் உள்ளது. ஆனால் ஓர் அயோடின்-அயோடின் பிணைப்பு மற்றொன்றை விட நீளமானதாக சமச்சீரற்று உள்ளது. வெவ்வேறு சேர்மங்களில் உள்ள மூவயோடைடு Ia-Ib-Ic, அயனிகளின் பரிமாணங்களை ஒப்பிடும் அட்டவணை கீழே காட்டப்பட்டுள்ளது:

சேர்மம் Ia–Ib (பைக்கோமீட்டர்) Ib–Ic (பைக்கோமீட்டர்) angle (°)
TlI3 306.3 282.6 177.90
RbI3 305.1 283.3 178.11
CsI3 303.8 284.2 178.00
NH4I3 311.4 279.7 178.55

தயாரிப்பு

தொகு

விகிதவியல் அளவுகளில் தாலியம்(I) அயோடைடையும் அயோடினையும் செறிவூட்டப்பட்ட நீரிய ஐதரயோடிக் அமிலத்தில் கரைத்து ஆவியாக்கினால் அல்லது எத்தனாலில் உள்ள அயோடினுடன் தாலியம்(I) அயோடைடைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு
  • WebElements
  • Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  1. Tebbe, K.F.; Georgy, U. (1985-12-15). "Die Kristallstrukturen von Rubidiumtriiodid und Thalliumtriiodid" (in de). Acta Crystallographica C 42 (12): 1675–1678. doi:10.1107/S0108270186090972. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்_மூவயோடைடு&oldid=4075999" இலிருந்து மீள்விக்கப்பட்டது