தாளங்களின் பட்டியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்குப் பயன்படுவது தாளம் ஆகும். கர்நாடக இசையில் தற்போது ஏழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். "சப்தம்" என்பது வடமொழியில் எழு என்று பொருள்படும்.
ஏழு தாளங்கள்
தொகுதாள உறுப்புக்கள்
தொகுதாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன:
- 1. லகு
- 2. அனுதிருதம்
- 3. திருதம்
- 4. குரு
- 5. புளுதம்
- 6. காகபாதம்
35 தாளங்கள்
தொகுஏழு வகைத்தாளங்களின் மூலமாகவும், ஐந்து வகையான லகுவின் வகைகள் மூலமாகவும் மொத்தமாக 35 தாளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டிற்கு லகுவின் ஓர் ஜாதியான திஸ்ரத்தை எடுத்துக்கொண்டால்
- திஸ்ர ஜாதி துருவ தாளம்
- திஸ்ர ஜாதி மட்டிய தாளம்
- திஸ்ர ஜாதி ரூபக தாளம்
- திஸ்ர ஜாதி ஜம்பை தாளம்
- திஸ்ர ஜாதி திரிபுடை தாளம்
- திஸ்ர ஜாதி அட தாளம்
- திஸ்ர ஜாதி ஏக தாளம்
ஆகிய ஏழு பேதங்களை ஒரு லகுவின் ஜாதி தருவதுப்பொல் ஐந்து ஜாதிகளும், ஏழு தாளவகைகளும் சேர்ந்து மொத்தமாக 35 தாளவகைகளும் உருவாகின்றன.