தாள தசப்பிராணங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கருநாடக இசையில் தாளத்தின் 10 அம்சங்கள் அல்லது கூறுகள் தாள தசப்பிராணங்கள் எனப்படும். அவையாவன:
- காலம்
- மார்க்கம்
- கிரியை
- அங்கம்
- கிரகம்
- ஜாதி
- களை
- லயம்
- யதி
- பிரஸ்தாரம்
காலம்
தொகுகாலம் இசையில் நேரத்தின் அலகுகளை வகுக்கிறது. கணம் (க்ஷணம்), லவம், காஷ்டம், நிமிடம் (நிமிஷம்), களை, சதுர்பாகம், அனுத்ருதம், துருதம், லகு, புலுதம், காகபதம் - இவை காலத்தின் வரையறைகள்.
மார்க்கம்
தொகுதாளத்தின் ஒரு அட்சரத்துக்குள் எத்தனை சுரங்கள் அடங்கும் என்பதை மார்க்கம் வரையறுக்கிறது. சரியான முறையில் தாளம் போடவும், உருப்படிகளை சரியான சுர-குறிப்புகளில் எழுதவும் மார்க்கம் உதவுகிறது.
ஆறு மார்க்கங்கள் உள்ளன. அவை ஷண்மார்க்கங்கள் என்றழைக்கப்படுகின்றன. முதல் மூன்று பல்லவி பாடவும், பின் மூன்று வர்ணங்கள், கிருதிகள் போன்ற இதர இசை வடிவங்களுக்கும் பயன்படுகின்றன.
மார்க்கம் | களைகள், ஒரு தாள அட்சரத்துக்கு |
---|---|
1. தட்சிணம் | 8 |
2. வார்த்திகம் | 4 |
3. சித்ரம் | 2 |
4. சித்ரதரம் | 1 |
5. சித்ரதமம் | 1/2 |
6. அதி சித்ரதமம் | 1/4 |
லயம்
தொகுபார்க்க: லயம்