தாழங்ஙாடி ஜமா மசூதி

கேரளத்தின் கோட்டயம் மாவட்டதில் உள்ள பள்ளிவாசல்

தாழங்ஙாடி ஜமா மசூதி (Thazhathangady Juma Mosque) என்பது இந்தியாவின், கேரளத்தின், கோட்டயம் நகருக்கு அருகில் அருகில் உள்ள பாரம்பரிய தலமும், பள்ளிவாசலும் ஆகும். இது இந்தியாவின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகும், இதன் காலம் 1000 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையானது. இந்த பள்ளிவாசலானது கட்டிடக்கலை, மர வேலைப்பாடு அழகு ஆகியவற்றின் சிறப்பால் பிரபலமானது. இதன் தெற்குப் பகுதி 2012 இல் இடிக்கப்பட்டு இரும்புத் தூண்கள், அலுமினியத் தகடுகள், மினார்கள் போன்றவற்றுடன் விரிவாக்கபட்டது. இந்த மசூதி மீனாசில் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

தாழங்ஙாடி ஜுமா மசூதியானது "தாஜ் ஜுமா மசூதி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பள்ளிவாசலின் மூதாதையர்கள் கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோட்டயத்தில் வந்து குடியேறியவர்களாவர். இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் சுதந்திர போராட்டம் மற்றும் பிற தேசிய இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த மசூதி மர சிற்பங்களுக்கும், கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது.

அண்மைய இற்றையின்படி, கேரளத்தின் கோட்டையத்தில் உள்ள தாழங்ஙாடி ஜுமா மசூதியானது பெண்களுக்கு தன் கதவுகளைத் திறந்துள்ளது. "சரியான உடையணிந்த முஸ்லீம் பெண்கள் ஏப்ரல் 24 மற்றும் மே 8 ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே மசூதிக்குள் நுழையலாம்" என்று தலைமை இமாம் மௌலவி சிராஜ்ஜுதீன் ஹஸ்னி கூறினார். [1]

இணையதளம்  : https://thazhathangadyjumamasjid.com/ பரணிடப்பட்டது 2020-12-03 at the வந்தவழி இயந்திரம்

குறிப்புகள் தொகு

  1. "A 1000-Year-Old Kerala Mosque Opens Its Doors For Women For The First Time". indiatimes.com (in ஆங்கிலம்). 2016-04-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழங்ஙாடி_ஜமா_மசூதி&oldid=3348858" இலிருந்து மீள்விக்கப்பட்டது