தாவர வேலி

தாவர வேலி (hedge) புதர்கள், மரங்கள் முதலான தாவரங்களைக் கொண்டு அமைக்கப்படும் வேலி அல்லது எல்லையாகும்.

உயிர் வேலிதொகு

 
மொசாம்பிக்கில் அமைக்கப்பட்டுள்ள ஓர் உயிர் வேலி

உயிர் வேலி (live fence) எனப்படுவது செடி, குற்றுச்செடி, கொடி, மரங்கள் ஆகியவற்றால் எழுப்பப்பட்ட வேலி ஆகும்.[1] இவ்வுயிர் வேலியை இயற்கைக்கு எதிரான, உயிர் பன்மையை சிதைக்கும் இரும்புக் கம்பி, முள் கம்பி, வலை, கற்சுவர் இவற்றுக்கு மாற்றாக வீடு மற்றும் பண்ணைகளுக்கு பாதுகாப்பு அரணாக அமைக்கப்படுகின்றது. உயிர்தாவரங்களால் அமைக்கப்படுவதாலும், பல உயிரிகள் இதில் வாழ்வதாலும் இவ்வேலி உயிர்வேலி என அழைக்கப்படுகிறது. பழந்தமிழரின் வேளாண்மையில் உயிர் வேலிகளே பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டன. இவ்வகை வேலிகள் உயிரிப்பல்வகைமைப் பெருக்கத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் அடிப்படையாக அமைகிறது.

நுண்ணுயிரிகளும், மலர் தாவரங்கள், காய்கனி செடிகள், கீரை வகைகள், போன்ற தாவரங்களும், பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் உள்ளிட்ட விலங்குகளும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உயிர் வேலி அமைகிறது. இதன் மூலம் உணவு சங்கிலி, உணவு வலை போன்றச் சுற்றுசூழல் மேம்பாட்டுக் காரணிகளை பேணுவதுடன் உறுதியான இயற்கைப் பாதுகாப்பையும் வழங்குவது இதன் சிறப்பாகும்.

உயிர் வேலியின் பயன்கள்தொகு

 • பாதுகாப்பு
 • காய் கனிகள், கீரைகள், மூலிகைகள் உற்பத்தி
 • காற்றுத்தடுப்பு மற்றும் காற்று வடிகட்டுதல்
 • இயற்கை உரம் மற்றும் பசுந்தாள் உரம்
 • வெள்ளம் மற்றும் மண்ணரிமானத் தடுப்பு
 • மழை நீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு
 • பசுந்தீவனம்
 • உயிர்வளிப் பெருக்கம் மற்றும் கரியமிலவாயுச் சுருக்கம்
 • உயிரிப் பல்வகைமைப் பெருக்கம்
 • பயிர்ப் பாதுகாப்பு
 • உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு
 • பொருளாதாரம்

மேற்கோள்கள்தொகு

 1. Cherry, Stefan D. (1998). "Agroforestry at Cornell – Live Fences". பார்த்த நாள் 12-04-2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_வேலி&oldid=2258360" இருந்து மீள்விக்கப்பட்டது