தாவீதின் கோபுரம்

தாவீதின் கோபுரம் (Tower of David, (எபிரேயம்: מגדל דוד‎, Migdal David, அரபு மொழி: برج داود‎, Burj Daud) என்பது யோப்பா வாயிக்கு அருகில் எருசலேமின் பழைய நகர் நுழைவில் அமைந்துள்ள புராதான நகரப் பாதுகாப்பு அரண் ஆகும்.

தாவீதின் கோபுரமும் எருசலேம் நகரச் சுவர்களும்

பழைய நகர் பாதுகாப்பிலுள்ள தந்திரோபாய பலவீனப் பகுதிகளை பலப்படுத்த கட்டப்பட்ட இந் நகரப் பாதுகாப்பு அரண் தற்போது கி.மு. 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அத்திவாரத்தின் மேல் அமைந்துள்ளது. இக் கோபுரம் எருசலேமை வெற்றி கொண்ட கிறித்தவர், இசுலாமியர், மம்லுக், துருக்கியர் ஆகியோரால் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டது. இது 2700 ஆண்டு பழமையான முக்கியத்துவம்மிக்க தொல்பொருள் கண்டுபிடிப்புக்களையும், இசையரங்கு போன்ற பல நிகழ்வுகளுக்கான இடமாகவும் திகழ்கிறது.

"தாவீதின் கோபுரம்" எனும் பெயரை பைசாந்திய கிறித்தவர்கள் இவ்விடம் தாவீன் அரண்மனை இருந்த இடமாகக் கருதி இட்டனர்.[1] விவிலியத்தின் இனிமைமிகு பாடல் நூலிலிருந்து "தாவீதின் கோபுரம்" எனும் பெயரை அவர்கள் பெற்றனர்.[2]

குறிப்புகள்

தொகு
  1. Jerome Murphy-O'Connor, The Holy Land, 22.
  2. (இனிமைமிகு பாடல் 4:4)

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tower of David
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீதின்_கோபுரம்&oldid=3765993" இலிருந்து மீள்விக்கப்பட்டது