திஃக்வானா (Tijuana, /tˈhwɑːnə/ tee-WHAH-nə; எசுப்பானியம்: [tiˈxwana]) மெக்சிக்கோ நாட்டின் பாகா கலிபோர்னியா மாநிலத்தின் மீப்பெரும் நகரமாகும். பாகா கலிபோர்னியா மூவலந்தீவிலும் இதுவே மிகப்பெரும் நகரமாகும். திஃக்வானா பெருநகரப்பகுதியின் மையத்திலும் பன்னாட்டு சான்டியேகோ-திஃக்வானா பெருநகரப்பகுதியின் மையத்திலும் அமைந்துள்ள திஃக்வானா மெக்சிகோவின் மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[4] இப்பகுதியின் பொருளியல் நிலை, கல்வி, பண்பாடு, கலை, அரசியலில் திஃக்வானா முக்கியப் பங்காற்றுகின்றது. இந்த நகரமும் இதனைச் சுற்றியுள்ள பெருநகரப் பகுதிகளும் நாட்டின் வடமேற்கில் முதன்மைத் தொழில் மற்றும் தாக்கமிக்க மையமாக விளங்குகின்றன. திஃக்வானா உலகளாவிய நகரத் தகுதி பெற்றுள்ளது.[5] As of 2015, திஃக்வானா நகரத்தின் மக்கள்தொகை 1,641,570 ஆகும்.[1]

திஃக்வானா
திஃக்வானா நகரம்
அடைபெயர்(கள்): டி.ஜே.
மெக்சிக்கோவின் நுழைவாயில்
இருகடலிடை இருதயம்
குறிக்கோளுரை: அக்வை எம்பீசா லா பட்ரியா (Aquí empieza la patria - தந்தைநாடு இங்கு துவங்குகிறது)
திஃக்வானா is located in மெக்சிக்கோ
திஃக்வானா
திஃக்வானா
மெக்சிக்கோவில் திஃக்வானாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 32°31′30″N 117°02′0″W / 32.52500°N 117.03333°W / 32.52500; -117.03333
நாடு மெக்சிக்கோ
மாநிலம்பாகா கலிபோர்னியா பாகா கலிபோர்னியா
நகராட்சிதிஃக்வானா
நிறவப்பட்டதுசூலை 11, 1889
பரப்பளவு
 • மாநகரம்637 km2 (246 sq mi)
 • மாநகரம்
1,392.5 km2 (537.9 sq mi)
ஏற்றம்
20 m (65 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மாநகரம்16,41,570 [1]
 • மதிப்பீடு 
(2018)
18,02,004
 • பெருநகர்
18,40,710 [1]
 [2]
இனம்திஃக்வானிய[3]
நேர வலயம்ஒசநே−8 (பசிபிக் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே−7 (பசிபிக் பகலொளி நேரம்)
அஞ்சல் குறியீடு
22000-22699
Area code+ 52 664
இணையதளம்http://www.tijuana.gob.mx

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Número de habitantes. Baja California". www.cuentame.inegi.org.mx.
  2. Link to 2015 Mexican Census Info INEGI: Instituto Nacional de Estadística, Geografía e Informática.
  3. "The Tijuanense Identity".
  4. Walker, Margath (January 2011). "Knowledge production and border nationalism in northern Mexico". Nations and Nationalism 17 (1): 168–187. doi:10.1111/j.1469-8129.2010.00461.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1469-8129.2010.00461.x/full. 
  5. GaWC. "The World According to GaWC". பார்க்கப்பட்ட நாள் 2011-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திஃக்வானா&oldid=2547409" இலிருந்து மீள்விக்கப்பட்டது