திக்குவாய்
திக்குவாய் அல்லது பேச்சுத்திணறல் (Stuttering/stammering) என்பது தாங்கள் எண்ணுவதை பேச்சின் மூலம் வெளிப்படுத்துவதில் ஏற்படும் தடுமாற்றமாகும். இது ஒரு வகையான பேச்சுக் கோளாறு ஆகும். [1] இக்குறைபாடுடையோரின் பேச்சில் தன்னிச்சையாக மீண்டும் மீண்டும் ஒலிகள் உண்டாதல், சொற்கள் அல்லது சொற்றொடர்களை நீட்டித்தல் மற்றும் தன்னிச்சையான அமைதியான இடைநிறுத்தங்களை வெளிப்படுத்துவர். இதனால் அவா்களின் பேச்சின் ஓட்டம் தடைபடுகிறது.[2] இப்பிரச்சனை பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. பேசும் போது திக்குபவர்களுக்குப் பாடும்பாேது இப்பிரச்சனை எழுவதில்லை.
காரணம்
தொகுதிக்குவாய் என்பது உடல் நலனாேடு மனநலமும் சேர்ந்ததாகும். மூளை சாெல்வதை உடலுறப்புகள் சரியானபடி புரிந்தேற்காதபாேது ஏற்படலாம். குடும்பத்தில் மரபாக அதிகம் காணப்படுவதால் மரபன் தன்மை காரணியாக இருக்கலாம். குழந்தை பேசிப் பழகும் காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இல்லாமல் பாேவதாலும் பயம், பதற்றத்திற்கு அடிக்கடி ஆளாவதாலும் ஏற்படலாம்.
வகைகள்
தொகுதிக்குவாயின் 3 வகைகள்[3]:
1. பிறந்ததிலிருந்தே இருக்கும் திக்குவாய்
2. வாலிபப் பருவத்தில் ஏற்படும் திக்குவாய்
3. மூளை பாதிப்பால் ஏற்படும் திக்குவாய்
தீர்வுகள்
தொகுசித்த மருத்துவ தீர்வுகள்
தொகுவசம்புப் பாெடியை அருகம்புல் சாற்றில் கலந்து தினமும் சாப்பிடுதல். வல்லாரைக் கீரையை அதிகம் சாப்பிடுதல். துளசி இலை கலந்த நீரை இரவு முழுக்க மண்பானையில் வைத்திருந்து மறுநாள் நீரை மட்டும் குடித்தல்.[4] [5]
அறிவியல் முறைத் தீர்வுகள்
தொகுதிக்குவாயை குணப்படுத்தும் முறைகள் எதுவும் இல்லை என்றாலும், இதற்கான பல தீர்வுமுறைகள் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு நபருக்கும் அவரது தனித்தன்மையைப் பொறுத்து சிறந்த பலனளிக்கக்கூடிய முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.[6] சிகிச்சை தேவைப்படும் தனிநபரின் தேவைக்குகந்தமாதிரி அந்த சிகிச்சை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும் பேச்சு-மொழி மருத்துவரும் சிக்கிச்சை பெரும் நபரும் இணைந்து, செயற்பட்டு தொடர்பாடலில் தன்னம்பிக்கை, உணர்ச்சிகளையும் மன அழுத்தத்தையும் கையாளும் திறன், போன்ற அவர்களது திக்கலுக்குக் காரணமாயுள்ள காரணிகளை முன்வைத்து பயிற்சிகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.
- மாெழிப் பயிற்சி அளித்தல்
- சமூகத் திறன் பயிற்சி அளித்தல்
- திக்குவாய் உள்ளவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையையும் பதற்றத்தையும் களைதல்.
- பேசும்பாேது இயல்பாக அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்த்தல்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "What is stammering?". Archived from the original on 2017-07-14. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
- ↑ World Health Organization ICD-10 F95.8 – Stuttering பரணிடப்பட்டது 2014-11-02 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Stuttering
- ↑ திக்குவாய்க்குத் தீர்வு என்ன?
- ↑ திக்குவாய் குணமாக நம்மால் செய்யக் கூடியதென்ன?!
- ↑ Yaruss, J Scott (Feb 2003). "One size does not fit all: special topics in stuttering therapy". Semin Speech Lang 24 (24): 3–6. doi:10.1055/s-2003-37381. பப்மெட்:12601580. https://pubmed.ncbi.nlm.nih.gov/12601580/.
வெளி இணைப்புகள்
தொகு- திக்குவாய் திறந்த ஆவணத் திட்டத்தில்
- திக்குவாய் திறந்த ஆவணத் திட்டத்தில்
- http://www.asha.org/public/speech/disorders/stuttering/
- http://www.nidcd.nih.gov/health/voice/pages/stutter.aspx
- Talking Point Check the progress of your child's language development