திக்ரே மாகாணம்

திக்ரே மாகாணம் (Tigray Province) (Amharic, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்த எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அமைந்த தன்னாட்சி கொண்ட மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் மெக்கல்லே ஆகும். இம்மாகாணம் திக்ரே பிரதேசம் மற்றும் அபார் பிரதேசத்தின் பகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாகாணத்தின் தலைநகரம் மெக்கல்லே நகரம் ஆகும். இம்மாகாண மக்கள் திக்ரே மொழி பேசுகின்றனர்.

எத்தியோப்பியாவின் மாகாணங்கள்

இம்மாகாணத்தின் வடக்கு மற்றும் மேற்கில் முறையே எரித்திரியா மற்றும் சூடான் நாடுகளில் எல்லைகள் உள்ளது.[1]இதன் கிழக்கில் அபார் பிரதேசம், தெற்கில் அம்மாரா பிரதேசம் எல்லைகளாக உள்ளது.

இம்மாகண மக்கள் தொகையில் கிறித்துவர்கள் 95.5%, இசுலாமியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இம்மாகாணத்தின் பெரிய இனக் குழுவினாக திக்ரே மொழி பேசும் இனக்குழுவினர் 90% ஆகவுள்ளனர். திக்ரே மாகாணம் நிர்வாக வசதிக்காக 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[2]அவைகள்:மிராபவி மேற்கு மண்டலம், ஹுமெரா கிழக்கு மண்டலம், அதிகிராத் மண்டலம், மெககெலேக்னவ் மத்திய மண்டலம், தெபுபவி தெற்கு மண்டலம், வடமேற்கு மண்டலம், தென்கிழக்கு மண்டலம் ஆகும். மண்டலங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

புவியியல்

தொகு

திக்ரே மாகாணம் மலைப்பகுதியாகும். இம்மாகாணம் பெரிய மலைகளால் சூழ்ந்த இயற்கை காடுகள் கொண்ட மாகாணம் ஆகும். திக்ரே பிரதேசத்தில் உற்பத்தியாகும் தக்கீசு ஆறு கிழக்கு சூடான் மற்றும் எரித்திரியா வழியாக பாய்ந்து நைல் நதியுடன் கலக்கிறது. தக்கீசு ஆறு எத்தியோப்பியாவின் திக்ரே பிரதேசத்திற்கும், எரித்திரியா நாட்டிற்கும் எல்லையாக உள்ளது.

வரலாறு

தொகு

இம்மாகாணத்தின் திக்ரே மொழி பேசும் இனக்குழுவினர், எத்தியோப்பியா நாட்டின் மக்கள் தொகையில் 6% மட்டுமே இருப்பினும், தனி நாடு கோரி திக்ரே மக்கள் விடுதலை முன்னணிப் படையினர் 2020-ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறார்கள்.[3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Smidt, Wolbert (2010). "Təgray". Encyclopaedia Aethiopica O-X. Wiesbaden: Harrassowitz Verlag. 888–895. 
  2. Tigray Region Statistics. Addis Ababa: Central Statistical Agency. 2005.
  3. Ethiopia’s Tigray conflict


"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்ரே_மாகாணம்&oldid=3387664" இலிருந்து மீள்விக்கப்பட்டது