திக்ரே பிரதேசம்
திக்ரே பிரதேசம் (Tigray Region) கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்த எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் திக்ரே பிரதேசம் அமைந்துள்ளது. இதனை திக்ரே தேசிய பிரதேச அரசு (National Regional State of Tigray) என்றும் அழைப்பர். திக்ரே பிரதேசத்தின் தலைநகரம் மெக்கெல்லே ஆகும்.
திக்ரே பிரதேசம்
ክልል ትግራይ | |
---|---|
மாகாணம் | |
National Regional State of Tigray | |
குறிக்கோளுரை: "ዘይንድይቦ ጎቦ" "There are no mountains we would not climb" | |
எத்தியோப்பியாவின் வடக்கில் திக்ரே பிரதேசத்தின் அமைவிடம் | |
நாடு | எத்தியோப்பியா |
தலைநகரம் | மெக்கல்லே |
அரசு | |
• அதிபர் | தெப்ரெட்சியன் ஜெப்ரெமைக்கேல் |
• துணை அதிபர் | பெட்டில்வொர்க் ஜெரெக்சியாபெர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 50,079 km2 (19,336 sq mi) |
மக்கள்தொகை (2020)[2] | |
• மொத்தம் | 70,70,260 |
• தரவரிசை | 5வது |
• அடர்த்தி | 140/km2 (370/sq mi) |
மக்கள் தொகை பரவல் | |
• அலுவல் மொழி | திக்ரிங்கியா மொழி |
• பிற மொழிகள் | சகோ மொழி, குனாமா மொழி, சாம்தாங்கா மொழி, அம்ஹரிக் மொழி, ஒரோமோ மொழி |
• இனம் | திக்ரியர்கள் |
நேர வலயம் | ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்கா நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ET-TI |
மனித மேம்பாட்டுச் சுட்டெண், (2018) | 0.491 [3] low • 5th |
திக்ரே பிர்தேசத்தின் வடக்கில் எரித்திரியாவும், மேற்கில் சூடான், தெற்கில் எத்தியோப்பியாவின் அம்மாரா பிரதேசமும், கிழக்கில் எத்தியோப்பியாவின் அபார் பிரதேசமும் எல்லைகளாக உள்ளது.[4]
திக்ரே பிரதேச அரசு அதிபர் தலைமையிலான சட்ட மன்றம் நிர்வாகத்தையும், உயர் நீதி மன்றத்தின் தலைமையில் நீதி நிர்வாகத்தையும் மேற்கொள்கிறது.
நவம்பர் 2020 முதல் தனி நாடு கோரி, எத்தியோப்பியா கூட்டாட்சி அரசுக்கு எதிராக திக்ரே பிரதேச மக்கள் போராடி வருகிறார்கள்.[5][6]
வரலாறு
தொகுபண்டைய வரலாறு
தொகுதிக்ரே பிரதேசம் எத்தியோப்பியா நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. [7] பழைமையான தம்மோத் இராச்சியத்தினர் திக்ரே மற்றும் எரித்திரியா பகுதிகளை கிமு 980 முதல் கிமு 400 வரை ஆண்டனர்.[8].[9] இப்பிரதேசம் சில நூற்றாண்டு காலமாக பண்டைய எகிப்து இராச்சியத்தின் கீழ் இருந்தது. அக்சும் இராச்சியத்தினர் திக்ரே பிரதேசத்தை மையமாகக் கொண்டு கிபி 100 முதல் கிபி 960 முடிய ஆட்சி செய்தனர்.[10][11][12] [13]இப்பிரதேசத்தில் யூதம், கிறித்துவம் மற்றும் இசுலாமியச் சமயங்கள் தழைத்தோங்கியது. குறைசிகளால் முகமது நபி, மெக்காவிலிருந்து விரட்டியடிக்கப் போது, திக்ரே பிரதேசத்தில் தம்மை பின்பற்றுவர்களுடன் சிறிது காலம் வரை தஞ்சம் அடைந்தனர்.
மத்திய கால வரலாறு
தொகுநவீன வரலாறு
தொகுஎத்தியோப்பிய உள்நாட்டுப் போர்
தொகு12 செப்டம்பர் 1974 அன்று அரசர் ஹைலி_செலாசிக்கு எதிராக மாக்சிச-லெனினிச பாதுகாப்பு படைகள், காவல் துறையினர், பிராந்திய இராணுவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புக் குழுவால் (சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம்) தொடங்கப்பட்ட இராணுவப்_புரட்சி ஆகும். கிளர்ச்சியாளர்களின் கூட்டணியான எத்தியோப்பிய மக்களின் புரட்சிகர மக்களாட்சி முன்னணி (EPRDF), 1991-ல் அரசை வீழ்த்தும் வரை இப்போர் நடந்தது[14]. இப்போரில் குறைந்தபட்சம் 14 லட்ச மக்கள் உயிரிழந்தனர்.
திக்ரே போர்
தொகுநவம்பர் 2020-ஆம் ஆண்டில் திக்ரே பிரதேச பொதுத் தேர்தல் முடிந்தவுடன், திக்ரே போராளிகள் தனி நாடு கோரி எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா அரசுப் படைகளுடன் கொரில்லாத் தாக்குதல்கள் தொடங்கினர்.[15] [16] கொரானா பெருந்தொற்று காரணமாக எத்தியோப்பியாவில் வறுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது.[17]
புவியியல்
தொகுகிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்த எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அமைந்த திக்ரே பிரதேசம் அதிகம் மலைகள் கொண்டது. அதில் 10 மலைகள் 2388 மீட்டரும், அதற்கு மேலும் உயரம் கொண்டது. அதில் பெர்ரா இம்பா மலை 3954 மீட்டர் உயரம் கொண்டது. [18]இம்மாகாணத்தில் உற்பத்தியாகும் தக்கீசு ஆறு கிழக்கு சூடான் மற்றும் எரித்திரியா வழியாக பாய்ந்து நைல் நதியுடன் கலக்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2007-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திக்ரே பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை 4,316,988 ஆகும். மக்களில் பெரும்பான்மையாக கிறித்தவர்கள் 95.6% மற்றும் இசுலாமியர்கள் 4.01% ஆகவுள்ளனர்.[19] திக்ரே பிரதேசத்தில் கிறித்தவர்கள் 4.01% ஆகவுள்ளனர்.
இனக்குழுக்கள்
தொகுதிக்ரே பிரதேசத்தில் திக்ரே மொழி பேசுவர்கள் 96.55% ஆகவுள்ளனர். சகோ மொழி, குனாமா மொழி, சாம்தாங்கா மொழி, அம்ஹரிக் மொழி மற்றும் ஒரோமோ மொழிகள்[20] பேசும் இன மக்கள் 3.45%
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "National Statistics: Section-B Population" (PDF). Central Statistical Agency. 2006. Archived from the original (PDF) on 21 February 2007. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2017. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency. Archived from the original on 6 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Sub-national HDI – Area Database – Global Data Lab". hdi.globaldatalab.org. பார்க்கப்பட்ட நாள் 2020-09-10.
- ↑ Eritrea and Ethiopia (Map). 1:5,000,000. Central Intelligence Agency. 2009. Map #803395.
- ↑ "Eritrean forces killed 100s of civilians in Tigray 'rampage': HRW". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
- ↑ "Tigray crisis: Ethiopia orders military response after army base seized" (in en-GB). BBC News. 2020-11-04. https://www.bbc.com/news/world-africa-54805088.
- ↑ National Geographic (3 December 2018). "In search of the real Queen of Sheba, Legends and rumors trail the elusive Queen of Sheba through the rock-hewn wonders and rugged hills of Ethiopia".
- ↑ Damot
- ↑ Shaw, Thurstan (1995), The Archaeology of Africa: Food, Metals and Towns, Routledge, p. 612, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-11585-8
- ↑ Pankhurst, Richard K.P.; Addis Tribune, "Let's Look Across the Red Sea I", 17 January 2003 (archive.org mirror copy)
- ↑ Munro-Hay, Stuart (1991). Aksum: An African Civilization of Late Antiquity (PDF). Edinburgh: University Press. p. 57. Archived from the original (PDF) on ஜனவரி 23, 2013. பார்க்கப்பட்ட நாள் February 1, 2013.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ Henze, Paul B. (2005) Layers of Time: A History of Ethiopia, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85065-522-7
- ↑ Phillipson, David (2012). Neil Asher Silberman (ed.). The Oxford Companion to Archaeology. Oxford University Press. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-973578-5.
- ↑ Valentino, Benjamin A. (2004). Final Solutions: Mass Killing and Genocide in the Twentieth Century. Ithaca: Cornell University Press. p. 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-3965-5.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help) - ↑ "Tigray crisis: Ethiopia orders military response after army base seized". BBC News. 2020-11-04. https://www.bbc.com/news/world-africa-54805088.
- ↑ "Inside Humera, a town scarred by Ethiopia's war". Reuters. 2020-11-23. https://www.aljazeera.com/gallery/2020/11/23/in-pictures-inside-a-tigray-town-scarred-by-ethiopian-conflict/.
- ↑ "'Extreme urgent need': Starvation haunts Ethiopia's Tigray". AP NEWS. 17 January 2021. https://apnews.com/article/ethiopia-united-nations-kenya-ef0b6b2db2994d4c3042cf19f3d92a2a.
- ↑ Hendrickx et al. 2015: Glacial and periglacial geomorphology and its paleoclimatological significance in three North Ethiopian Mountains, including a detailed geomorphological map
- ↑ Tigray Region population statistics
- ↑ "FDRE States: Basic Information – Tigray". Population. Archived from the original on 26 September 2007. பார்க்கப்பட்ட நாள் 22 March 2006.
வெளி இணைப்புகள்
தொகு- Tigray Region Web Portal
- Tigray Revenue Development Authority பரணிடப்பட்டது 2020-10-28 at the வந்தவழி இயந்திரம்
- Tigray State Information
- FDRE States: Basic Information – Tigray
- Map of Tigray Region at UN-OCHA[தொடர்பிழந்த இணைப்பு]
- Map of Tigray Region at DPPA of Ethiopia
- Endowment Fund for the Rehabilitation of Tigray website பரணிடப்பட்டது 2011-02-26 at the வந்தவழி இயந்திரம்
- Ethiopian Treasures – Queen of Sheba, Aksumite Kingdom – Aksum
- Ethiopian Treasures – Emperor Yohannes IV Castle – Mekele
- Future Observatory – Dam Building in Tigray by David Mercer
- "Tigrayans want end to border row" by Elizabeth Blunt, BBC News, 20 December 2007
- Tigray: Then and Now – the son of Mohamed Amin covers sustainable agriculture in Tigray following the Horn of Africa drought in 2011.