கல் தூபி (obelisk) உயரமான, நான்கு பக்கங்கள் கொண்ட, மேலேச் செல்ல குறுகலாகவும், உச்சியில் பிரமிடு வடிவ அமைப்புக் கொண்டது. இது ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட கல்தூணாகும்.[2] இக்கல்தூபிகள் முதலில் பண்டைய எகிப்திய பார்வோன்கள் அடைந்த வெற்றிகள் குறித்து எழுப்பப்பட்டது.

24 மீட்டர் (79 அடி) உயரம் கொண்ட அக்சும் கல் தூபி [1]
23 மீட்டர் உயரம், 250 மெட்ரிக் டன் கொண்ட கல் தூபி, அல்-உக்சுர்

பண்டைய எகிப்தியக் கட்டிடக் கலைஞர்கள் இக்கல்தூபியை, பண்டைய எகிப்திய மொழியில் தெக்ஹெனு என அழைத்தனர். பண்டைய கிரேக்கர்கள் இதனை ஒபேலிஸ்கோஸ் என அழைத்தனர். பின்னர் லத்தீன் மற்றும் ஆங்கிலத்திலும் இதனை ஒபேலிஸ்க் என அழைத்தனர். [3]

இது போன்ற கல்தூபிகள் பண்டைய எத்தியோப்பியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் உரோம் நாடுகளில் வெற்றிச் சின்னங்களாக எழுப்பப்பட்டது.

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Italy to keep Ethiopian monument". BBC News. 2001-07-20. பார்க்கப்பட்ட நாள் 2013-07-07.
  2. Obelisk PILLAR
  3. Baker, Rosalie F.; Charles Baker (2001). Ancient Egyptians: People of the Pyramids. Oxford University Press. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195122213. பார்க்கப்பட்ட நாள் 10 March 2014.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Obelisks
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்_தூபி&oldid=3791803" இலிருந்து மீள்விக்கப்பட்டது