ஒரோமியா பிரதேசம்

ஒரோமியா பிரதேசம் (Oromia) கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்த எத்தியோப்பியா நாட்டின் பெரிய பிரதேசம். ஒரோமியா பிரதேசத்தில் எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா உள்ளது. இப்பகுதியில் ஒரோமியா மொழி பேசும் ஒரோமியா ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.[3][4][5][6][7][8]}}இப்பிரதேசத்தின் தலைநகராகவும் அடிஸ் அபாபா நகரம் உள்ளது. ஒரோமியா பிரதேசத்தை 21 நிர்வாக மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[9][10]

எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
Oromia
ஒரோமியா
பிரதேச மாகாணம்
ஒரோமியா மாகாணம்
கடிகாரச் சுற்றுப்படி:இடமிருந்து வலம்:
ஒரோமியா பண்பாட்டு மையம், இர்ரீச்சா, சோப் ஒமர் குகைகள், வோன்சி எரிமலை, பலே மலைகள் தேசியப் பூங்கா மற்றும் அபிஜத்தா-சல்ல தேசியப் பூங்கா
Oromia-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் Oromia
சின்னம்
எத்தியோப்பியாவில் ஒரோமியா பிரதேசத்தின் அமைவிடம்
எத்தியோப்பியாவில் ஒரோமியா பிரதேசத்தின் அமைவிடம்
நாடு எதியோப்பியா எத்தியோப்பியா
அலுவல் மொழிஒரோமோ மொழி
தலைநகரம்அடிஸ் அபாபா
அரசு
 • ஆளுநர்சிமெலிஸ் அப்திசா
பரப்பளவு
 • மொத்தம்353,690 km2 (1,36,560 sq mi)
பரப்பளவு தரவரிசை1st
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்35,467,001[1]
இனங்கள்ஒரோமியர்
நேர வலயம்கிழக்கு ஆப்பிரிக்கா
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019)0.470[2]
low8th of 11

3, 53,690 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[11] ஒரோமியா பிரதேசத்தின் 2013-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரோமியா பிரதேசத்தின் மக்கள் தொகை 3,54,67,001 ஆகும்.[1]இது எத்தியோப்பியாவின் 11 பிரதேசங்களில் பெரும் மக்கள் தொகை கொண்டது.

அமைவிடம் தொகு

ஒரோமியா பிரதேசத்தின் கிழக்கில் சோமாலிப் பிரதேசமும், வடக்கில் அம்மாரா பிரதேசம் மற்றும் அபார் பிரதேசம் மற்றும் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம், வடகிழக்கில் திரே தாவா தன்னாட்சி நகரமும், மேற்கில் தெற்குப் பிரதேசம் மற்றும் சிதாமா பிரதேசமும், வடமேற்கில் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம் மற்றும் தெற்கில் தெற்கு சூடான் நாடும் எல்லைகளாக உள்ளது. எத்தியோப்பியாவின் 11 பிரதேசங்களில் திக்ரே பிரதேசம் தவிர மற்ற 10 பிரதேசகளுடன், ஒரோமியா பிரதேசத்தின் எல்லைகள் உள்ளது.

பிரதேச நிர்வாகம் தொகு

மண்டலங்கள் தொகு

ஒரோமிய பிரதேசத்தை நிர்வாக வசதிக்காக 22 மண்டலங்களாகவும், 317 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலங்களின் பட்டியல்:

  1. அர்சி மண்டலம்
  2. பலே மண்டலம்
  3. போர்னியா மண்டலம்
  4. புனோ மண்டலம்
  5. கிழக்கு அரார்கே மண்டலம்
  6. கிழக்கு சேவா மண்டலம்
  7. கிழக்கு வெலெகா மண்டலம்
  8. குஜி மண்டலம்
  9. ஹோரோ குதுரு வெலெகா மண்டலம்
  10. இலுபபோர் மண்டலம்
  11. ஜிம்மா மண்டலம்
  12. கேலம் மண்டலம்
  13. வடக்கு சேவா மண்டலம்
  14. தென்மேற்கு சேவா மண்டலம்
  15. மேற்கு அர்சி மண்டலம்
  16. மேற்கு குல்ஜி மண்டலம்
  17. மேற்கு ஹரார்கே மண்டலம்
  18. மேற்கு சேவா மண்டலம்
  19. மேற்கு வெலெகா மண்டலம்
  20. அதாமா சிறப்பு மண்டலம்
  21. ஜிம்மா சிறப்பு மண்டலம்
  22. ஒரோமியா சிறப்பு மண்டலம் (அடிஸ் அபாபாவைச் சுற்றிலும்)

முக்கிய நகரங்கள் தொகு

  1. அடிஸ் அபாபா
  2. அதமா
  3. அம்போ
  4. அசெல்லா
  5. பதேஸ்சா
  6. பலே ரோப்
  7. பெடெலெ
  8. பிஷோப்து
  9. பெய்கா
  10. புலே ஹோரா
  11. புராயி
  12. சிரோ
  13. டெம்பிடோலா
  14. பிச்சி
  15. கிம்பி
  16. கோபா
  17. ஹரமாயா
  18. ஹோலெதா ஜெனெட்
  19. ஜிம்மா
  20. கோயி பெட்சி
  21. மேட்டு
  22. நெகெலே அர்சி
  23. நெகெம்தே
  24. செபெட்டா
  25. சசாமனே
  26. வாலிசோ

மக்கள் தொகை பரம்பல் தொகு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1994 1,87,32,525—    
2007 2,69,93,933+44.1%
2015 3,36,92,000+24.8%
source:[12]

இனக்குழுக்கள் தொகு

இனக்குழு 1994 கணக்கெடுப்பு[13] 2007 கணக்கெடுப்பு[14]
ஒரோமோ மக்கள் 15,709,474 85% 23,708,767 88%
அம்மாரா மக்கள் 1,684,128 9% 1,943,578 7%
பிற இனக்குழுக்கள் 1,080,218 6% 1.341.588 5%
மொத்தம் 18,473,820 26.993.933

சமயம் தொகு

சமயம் (பிரதேசம் முழுவதும்) 1994 கணக்கெடுப்பு[15] 2007 கணக்கெடுப்பு[16]
இசுலாமியர்கள் 8,178,058 44% 12,835,410 48%
பழமைவாத கிறித்தவர்கள் 7,621,727 41% 8,204,908 30%
சீர்திருத்த கிறித்தவர்கள் 1,588,310 9% 4,780,917 18%
வாகெஃபன்னா (பழங்குடியின சமயம்) 778,359 4% 887,773 3%
பிற சமயக் குழுக்கள் 307,366 2% 284,925 1%
மொத்தம் 18,473,820 26,993,933
சமயம் (நகர்புறங்கள்) 1994 கணக்கெடுப்பு[15] 2007 கணக்கெடுப்பு[16]
பழமைவாத கிறித்துவர்கள் 1,330,301 68% 1,697,495 51%
இசுலாமியர்கள் 471,462 24% 990,109 30%
சீர்திருத்த கிறித்தவர்கள் 137070 7% 580,562 18%
பிற சமயக் குழுவினர் 23,971 1% 49,294 1%
மொத்தம் 1,962,804 3,317,460

மொழிகள் தொகு

1991-ஆம் ஆண்டு முதல் ஒரோமியா பிரதேசத்தில் பெரும்பான்மையாக ஒரோமோ மொழியை, இலத்தீன் எழுத்துக்களில் எழுதிப்படிக்கப்படுகிறது.[17] ஒரோமா பிரதேசத்தின் அலுவல் மொழி ஒரோமா மொழியாகும்.[18] எத்தியோப்பியாவில் ஒரோமா மொழி பேசுபவர்கள் 33.8% மேல் உள்ளனர்.[19] மேலும் இப்பிரதேசத்தில் வாழும் இசுலாமியர்கள் ஹவுசா மொழி மற்றும் ஆப்பிரிக்க பழங்குடிகள் சுவாகிலி மொழியும் பேசுகின்றனர்.[20]

பொருளாதாரம் தொகு

 
லெகா டெம்பி தங்கச் சுரங்கம் செல்லும் சாலை

ஒரோமிய பிரதேசத்தின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள் தானியங்கள், தங்கம், காபிக் கொட்டை மற்றும் ஒட்டகம் போன்ற கால்நடைகள் ஆகும். ஆண்டுக்கு 5,000 கிலோ கிராம் தங்கம், லெகா டெம்பி தங்கச் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படுகிறது.[21][22] காட் எனும் மூலிகைச் செடிகள் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.[23]

கல்வி நிலையங்கள் தொகு

  • அதமா பல்கலைக்கழகம்
  • அம்போ பல்கலைக்கழகம்
  • அர்சி பல்கலைக்கழகம்
  • தம்பி தோல்லோ பல்கலைக்கழகம் [24]
  • தண்டி போரு பல்கலைகழகக் கல்லூரி
  • ஹராமாயா பல்கலைக்கழகம்
  • ஜிம்மா பல்கலைக்கழகம்
  • மட்டா வாலபி பல்கலைக்கழகம்
  • மட்டு பல்கலைக்கழகம்[25]
  • நியூ ஜெனரேஷன் பல்கலைக்கழகக் கல்லூரி
  • ஒட்டா புல்தும் பல்கலைக்கழகம்[26]
  • ஒரோமிய மாநில பல்கலைக்கழகம்[27]
  • வொல்லேகா பல்கலைக்கழகம்
  • ரிப்ட் பள்ளத்தாக்கு பல்கலைக்கழக கல்லூரி

ஒரோமிய பிரதேச ஆளுநர்கள் தொகு

பதவிக் காலம் படம் ஆளுநர் பெயர் அரசியல் கட்சி குறிப்பு
1992–1995 அசன் அலி ஒரோமோ ஜனநாயகக் கட்சி
1995 – 24 சூலை 2001 குமா டெமெக்சா ஒரோமோ ஜனநாயகக் கட்சி
சூலை 2001 – அக்டோபர் 2001 காலிப் பணியிடம்
28 அக்டோபர் 2001 – 6 அக்டோபர் 2005 ஜுனேதீன் சதோ ஒரோமோ ஜனநாயகக் கட்சி
6 அக்டோபர் 2005 – செப்டம்பர் 2010 அப்துல்லா ஜெமெதா ஒரோமோ ஜனநாயகக் கட்சி
2010 – 17 பிப்ரவரி 2014 அலெமாயேகு அடோம்சா ஒரோமோ ஜனநாயகக் கட்சி
27 மார்ச் 2014 – 23 அக்டோபர் 2016 முக்தர் கேதிர் ஒரோமோ ஜனநாயகக் கட்சி
23 அக்டோபர் 2016 – 18 ஏப்ரல் 2019   லெம்மா மெஜெர்சா ஒரோமோ ஜனநாயகக் கட்சி
18 ஏப்ரல் 2019 – தற்போது வரை சிமெலிஸ் அப்திசா ஒரோமோ ஜனநாயகக் கட்சி/செழிமைக்கான கட்சி

எத்தியோப்பியாவின் பிரதேசங்கள் தொகு

நகரங்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2018. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency இம் மூலத்தில் இருந்து 29 மே 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180529163342/http://www.csa.gov.et/ehioinfo-internal?start=25. பார்த்த நாள்: 4 June 2018. 
  2. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  3. "Oromia Region, Ethiopia". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
  4. Tom Gardner (6 July 2017). "Ethiopians are having a tense debate over who really owns Addis Ababa". Quartz Africa. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
  5. OROMIA REGIONAL STATE, 2021, archived from the original on 2022-01-09, பார்க்கப்பட்ட நாள் 2022-02-10
  6. Ethiopia in brief, n.d., archived from the original on 2021-12-28, பார்க்கப்பட்ட நாள் 2022-02-10
  7. Spelled Finfine in the official website of Oromia Supreme Court (http://www.oromiyaa.gov.et/web/supreme-court பரணிடப்பட்டது 2021-01-15 at the வந்தவழி இயந்திரம்)
  8. "The State of Oromia". Archived from the original on 2008-06-17.
  9. "Oromia zone". oromiyaa.gov.et. Archived from the original on 2021-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-02-10.
  10. "sirni hundeeffama Godina Baalee Bahaa" (in om) இம் மூலத்தில் இருந்து 2020-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201019231547/https://www.obnoromia.com/ethiopia/2020/01/sirni-hundeeffama-godina-baalee-bahaa/. 
  11. Research on Covid-19 Responses and its Impact on Minority and Indigenous Communities in Ethiopia (PDF), September 2020
  12. "Ethiopia: Regions, Major Cities & Towns - Population Statistics in Maps and Charts". citypopulation.de.
  13. "Population and Housing Census 1994 – Oromiay Region Analytical Report" (PDF). Addis Ababa: Central Statistics Agency (CSA). p. 37. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
  14. "Population and Housing Census 2007 – Oromia Statistical" (PDF). Addis Ababa: Central Statistics Agency (CSA). p. 223. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
  15. 15.0 15.1 "Population and Housing Census 1994 – Oromiay Region Analytical Report" (PDF). Addis Ababa: Central Statistics Agency (CSA). p. 54. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
  16. 16.0 16.1 "Population and Housing Census 2007 – Oromia Statistical" (PDF). Addis Ababa: Central Statistics Agency (CSA). pp. 280–281. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
  17. "Afaan Oromo" (in ஆங்கிலம்). University of Pennsylvania, School of African Studies.
  18. Shaban, Abdurahman. "One to five: Ethiopia gets four new federal working languages". Africa News இம் மூலத்தில் இருந்து 2020-12-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201215231030/https://www.africanews.com/2020/03/04/one-to-five-ethiopia-gets-four-new-federal-working-languages//. 
  19. "The world factbook". cia.gov. 22 November 2021.
  20. "Children's books breathe new life into Oromo language". BBC. https://www.bbc.co.uk/programmes/p03jqf43. 
  21. "Ethiopian Gold Export Soars". ezega.com.
  22. gold mining companies in ethiopia, n.d.
  23. "Khat is big business in Ethiopia". Deutsche Welle. 10 July 2019.
  24. Dambi Dollo University Website
  25. Mettu University website
  26. Oda Bultum University Website
  27. Oromia state university website, archived from the original on 2022-02-10, பார்க்கப்பட்ட நாள் 2022-02-10

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Oromia Region
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

இணையதளங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரோமியா_பிரதேசம்&oldid=3662283" இலிருந்து மீள்விக்கப்பட்டது